Delhi Aiims Hospital Recruitment: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 198 வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள்

அவசர மருத்துவம் – 76, இரத்த வாங்கி – 13, அவசர மருத்துவம் ( தீவிர சிகிச்சை பிரிவு) – 12, இருதயவியல் ரெடியாலஜி – 1, சிறுநீரகவியல் – 3, தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை – 8, இருதயவியல் (பொது) – 1, ஆய்வகம் மற்றும் மருந்து பிரிவு – 2 ஆகிய பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி பயிற்சியுடன் கூடிய MBBS மருத்துவப்படிப்பு அல்லது பல் மருத்துவ படிப்பான BDS படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்

ரூ.21,000 முதல் 56,100/- ரூபாய் வரை. அனுபவம் மற்றும் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது எதுவும் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ இணையதளமான jr.aiimsexams.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 17 2023.

Latest Slideshows

Leave a Reply