Delhi Struggling With Heavy Rain: வெள்ளத்தில் தத்தளிக்கும் டெல்லி, 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை

வட இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை சீற்றம் ஆனது இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது. தில்லியில் உள்ள யமுனை ஆற்றில் இன்று பதிவான வெள்ள பதிவானது அதன் முந்தைய 1978 இன்  வெள்ள பதிவான  207.49 மீட்டரை முறியடித்து 207.71 மீட்டராக உயர்ந்து உள்ளது.

வெள்ள பெருக்கு என்பது டெல்லிக்கு புதிதல்ல, 1924, 1977, 1978, 1995, 2010, மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் பெய்த  பலத்த மழை காரணமாக பெரும் வெள்ளம் பதிவாகி உள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் சனி (8.07.2023) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (09.07.2023) பெய்த பலத்த மழை  40 ஆண்டுகால பெய்தமழை பதிவை  முறியடித்து உள்ளது.

வடமேற்கு இந்தியாவில்  8.07.2023  முதல் தொடர்ந்து பலத்த மழை    இடைவிடாது பெய்து வருவதால், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளில் மிகக் கனமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை, “  பருவமழை காலத்தில் ஏற்படும்   239.1 மிமீ இயல்பை விட 2 % அதிகமாக 243.2 மிமீ மழை பெய்துள்ளது”  என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்து இருந்தது. பல பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

நகரின் பல பகுதிகளில் கனமழையால் மழைநீர் தேங்கி போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கசிவு அபாயத்தை தடுக்க மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களில் வெளியான முழங்கால் ஆழமான நீரில் பயணிக்கும் பயணிகளின் படங்கள் மற்றும் வீடியோக்கள்  ஆனது  நகரின் வடிகால் உள்கட்டமைப்பின் செயல்திறன் பற்றிய கவலைகளை எழுப்பி உள்ளது.

நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறித்து டெல்லிவாசிகளுக்குத் தில்லி போக்குவரத்துக் காவல்துறை தனது ஆனது ட்விட்டர் கணக்கு மூலம் தொடர்ந்து தண்ணீர் தேங்கிய பகுதிகளின் படங்களைப் பதிவேற்றம் செய்து வருகிறது.

யமுனையின் நீர்மட்டம்

யமுனையில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், நாட்டின் தலைநகர்  டெல்லியில் வெள்ள அபாயம் அதிகரிக்கிறது. போதிய அளவில் யமுனையில் தூர்வாரப்படாததாலும்,  யமுனை ஆற்றின் நீரோட்டத்திற்கு இடையூறாக ஏராளமான பாலங்கள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டதாலும் யமுனை ஆற்றுப்படுகையில் வண்டல் மண் தேங்கியுள்ளது. 

யமுனை ஆற்றின் அருகே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் பள்ளிகளை நிவாரண முகாம்களாக மாற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பான பகுதிகளுக்கு குடியிருப்பாளர்கள்  இடம்பெயருமாறும் தாழ்வான பகுதிகளை குடியிருப்பாளர்கள் தவிர்க்குமாறும் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகளை  வழங்கியுள்ளது.

யமுனை ஆற்றின் அருகே உள்ள வீடுகள் மற்றும் சந்தைகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளதால், ஆயிரத்திற்கும் அதிகமான  மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளனர். மத்திய நீர் ஆணையத்தின் கணிப்புகள்  ஆனது  நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கின்றன.

ஆற்றின் கரைகளை வலுப்படுத்தவும், வெள்ளப்பெருக்கு பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும் தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி உறுதிப்படுத்தினார். ஜூலை முதல் எட்டு நாட்களில் இந்தியாவின் பல பகுதிகளில் பெய்த மழை, முழு நாட்டிற்கும் மழைப்பற்றாக்குறையைக் குறைத்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி அரசு தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு (என்.டி.ஆர்.எஃப்) தீவிரமான நிலைமை குறித்து எச்சரித்துள்ளது, என்றார். “நாங்கள் உயிர்கள், உடைமைகளை பாதுகாக்க வேண்டும். யமுனை ஆற்றின் அருகே  உள்ள தாழ்வான பகுதிகளில்   வசிக்கும்  மக்கள்  உடனடியாக  வெளியேற்றப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் இருந்து டெல்லி மக்களை நாம் ஒன்றாகக் காப்பாற்ற வேண்டும்,” திரு கெஜ்ரிவால் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் எச்சரித்தார்.

தில்லியில் உள்ள யமுனா நீர்மட்டம் புதனன்று 207.71 மீட்டராக உயர்ந்தது, 1978 இல் அதன் முந்தைய சாதனையான 207.49 மீட்டரை முறியடித்தது. 45 ஆண்டு கால சாதனையை முறியடித்து, தில்லியில் யமுனை ஆற்றில் இன்று புதன் கிழமை வரலாறு காணாத அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Latest Slideshows

Leave a Reply