Demonte Colony 2 Review : டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் திரை விமர்சனம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. பிரியா பவானி சங்கர், அருள் நிதி, முத்துக்குமார், அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் விரிவான விமர்சனத்தை (Demonte Colony 2 Review) தற்போது பார்க்கலாம்.

படத்தின் மையக்கருத்து :

பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்று சொல்லும் போது முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் புதிய கதையை படமாக எடுப்பார்கள். பேய் படம் என்றால் சொல்லவே தேவையில்லை, கதை சற்று வித்தியாசமாக இருந்தாலும், பழிவாங்கும் கதை மட்டும் அப்படியே இருக்கும். டிமான்டி காலனி 2 பொறுத்தவரை, பழைய டெம்ப்ளேட் பின்பற்றப்படவில்லை, அது ஒரு பிளஸ். இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. கதாநாயகன் சீனிவாசன் இறப்பது போல் காட்டப்பட்டுள்ளது. ஆனால் சீனிவாசன் இறக்காமல் இருப்பதுதான் இந்தப் படத்திற்கான ஓபனிங். அவரை காப்பாற்றியது யார்? ஏன் காப்பாற்றினார்கள்? டிமான்டிக்கும் முதல் பாகத்தில் தோன்றிய செயினிற்கும் என்ன நடந்தது என்பதை இரண்டாம் பாகம் விரிவாக சொல்கிறது.

Demonte Colony 2 Review :

சிரிப்பூட்டும் பேய்கள், அழகான மோகினிகள், பழி வாங்கும் பிளாஷ் பேக்கில் நடந்த மோசமான சம்பவம், இடையில் சம்மந்தமில்லாத பாடல்கள் அதற்கு ஒரு நடனம் இவற்றை தான் இவ்வளவு காலமாக தமிழ் சினிமா பேய் படமாக காட்டியது. டிமான்டி காலனி 2 சற்று வித்தியாசமான படமாக இருந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு பிரச்சனை தான் இப்போது நடக்கும் எல்லாவற்றுக்கும் காரணமாகிறது. அது தொடர்பான சம்பவங்களை ஒவ்வொரு நிமிடமும் சஸ்பென்ஸாக வைத்து நம்மை இருக்கையின் நுனியில் அமர வைத்து கதை சொல்லியிருக்கிறார் அஜய் ஞானமுத்து. 2009, 2015, 2021 என வெவ்வேறு வருடங்களில் கதை நகர்கிறது. முதல் பாகமும், இரண்டாம் பாகமும் ஒன்றாக வருவதற்கு முன்னும் பின்னும் காலப்போக்கில் எடுத்திருக்கிறார்கள்.

நாயகன் அருள் நிதி வழக்கம் போல் போதிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மற்ற படங்களில் சில காட்சிகளில் தோன்றி காணாமல் போகும் பிரியா பவானி சங்கர் தான் இந்த படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளார். மேலும் படத்தில் உள்ள நடிகர்கள் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்துள்ளனர். கதையின் மிகப்பெரிய ப்ளஸ் கதையும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும்தான். ரசிகர்களிடம் சொல்ல வந்த கதையை தெளிவாகவும் சஸ்பென்ஸாகவும் சொல்லியிருக்கிறார். படம் லாஜிக் ஓட்டைகளில் சிக்காமல் தப்பியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், படத்தொகுப்பாளர் குமரேஷ், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஆகியோர் தூண்களாக இருந்து பார்வை அனுபவத்தை மேம்படுத்தியுள்ளனர். இந்த ஹாரர் திரில்லர் படம் அனைத்து வகை ரசிகர்களையும் கவரும் என்பது உறுதி. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் (Demonte Colony 2 Review) படத்தை பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply