Desingu Raja 2 First Look : தேசிங்கு ராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தேசிங்கு ராஜா படம் வெளியாகி பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் நடிகர் விமலும், இயக்குனர் எழிலும் இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Desingu Raja 2 First Look) வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் நடித்த கில்லி, அஜித்குமார் நடித்த கிரீடம் போன்ற படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வந்த நடிகர் விமல், இதனை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். களவாணி மற்றும் வாகை சூடா வா போன்ற அடுத்தடுத்த படங்களும் அவருக்கு பெரும் விமர்சனங்களைப் பெற்றுத் தந்தன. கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்கள் கமர்ஷியல் வெற்றிகளை கொடுத்தது.

தேசிங்கு ராஜா :

ராஜா, துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, வேலனு வந்தாட்டா வெள்ளக்காரன் போன்ற படங்களை இயக்கிய எழில் 2013ல் நடிகர் விமல் நடித்த தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். பிந்து மாதவி, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பொதுவாக நகைச்சுவை விஷயங்களில் தனி ரசனை கொண்ட இயக்குனர் எழில். அவரது படங்களின் நகைச்சுவை காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன, குறிப்பாக தேசிங்கு ராஜாவில் நடிகர்கள் சூரி மற்றும் தம்பி ராமையா ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. இதைத் தொடர்ந்து அவர் நடித்த சரவணன் இருக்க பயமேன், வெள்ளக்கார துரை ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. அதே சமயம் நடிகர் விமல் நடித்த படங்களும் குறிப்பிடும்படியான வெற்றியைப் பெறவில்லை. தேசிங்கு ராஜா படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Desingu Raja 2 First Look :

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா மற்றும் ஹர்ஷிதா ஆகியோர் நடிக்கின்றனர். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் தயாரிக்கிறார். ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். தேசிங்கு ராஜா முதல் பாகமும், இரண்டாம் பாகமும் ஒன்றை ஒன்று சாராமல் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு (Desingu Raja 2 First Look) வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தேசிங்கு ராஜா 2 விமலுக்கு ஒரு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply