Details Of Upcoming Olympics : இனி வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டி விவரங்கள்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் நேரத்தில், அடுத்தடுத்து வரும் ஒலிம்பிக் போட்டி விவரங்களை (Details Of Upcoming Olympics) அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து 2032 இல் பிரிஸ்பேனில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இறுதியாக, 2036-க்கு பல ஏலங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன. 2036 ஒலிம்பிக் போட்டி பதிப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. IOC ஆனது 2019 ஆம் ஆண்டு முதல் பல நகரங்கள் அல்லது நாடுகளை கூடுதல் நிறுவனச் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் ஒன்றாக ஏலம் எடுக்க அனுமதித்து உள்ளது.

Details Of Upcoming Olympics - அடுத்தடுத்து வரும் ஒலிம்பிக் போட்டி விவரங்கள் :

2028 ஒலிம்பிக் போட்டிகள் :

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடுத்த 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறும் தேதியை உள்ளூர் போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 2028 ஆம் ஆண்டு ஜூலை 14ம் தேதி முதல் 30ம் தேதி வரையும், பாரா ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டு 15ம் தேதி முதல் 27ம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1932 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளதால் இப்பொழுது நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டி ஆனது  3வது முறையாக நடைபெற உள்ள போட்டியாகும். இந்த 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆனது ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2032 ஒலிம்பிக் போட்டிகள் :

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் 2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் 1956 ஆம் ஆண்டு மெல்பேர்னிலும் மற்றும் 2000 ஆம் ஆண்டு சிட்னியிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளதால் இப்பொழுது நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டி ஆனது 3வது முறையாக நடைபெற உள்ள போட்டியாகும். தற்போது ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் முதல் முறையாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக 2036க்கு பல ஏலங்கள் ஆனது இன்னும் பரிசீலனையில் உள்ளன.

Latest Slideshows

Leave a Reply