Devara Glimpse Video : ஜுனியர் NTR இன் "தேவரா" படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘தேவரா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை (Devara Glimpse Video) படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த 2022 ஆம் ஆண்டு வெளியான RRR திரைப்படம் வசூல் ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார். ‘தேவரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். பிரகாஷ்ராஜ் மற்றும் சைஃப் அலிகான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை (Devara Glimpse Video) படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Devara Glimpse Video - "தேவரா" படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ :

க்ளிம்ப்ஸ் வீடியோவானது (Devara Glimpse Video) அனிருத்தின் குரலில் ஆங்கில வரிகளுடன் கூடிய பாடல் ஒலிக்க இருண்ட கடல் அலைகளில் க்ளிம்ப்ஸ் வீடியோ தொடங்குகிறது. கடலில் உள்ள கப்பலில் இருந்து சில கன்டெய்னர்கள் திருடப்படுகின்றன. அடுத்த நொடியில், ஜூனியர் என்டிஆர், பின்னணி இசையில் கத்தியை சுழற்றியபடி, பார்வையாளர்களைக் கொன்றுவிடுகிறார். அடுத்து, கடலின் கரையில் உள்ள நீர் முற்றிலும் சிவப்பு நிறமாக மாறும். அந்த ரத்தக் கடலில் கத்தியைக் கழுவுகிறார் ஜூனியர் என்டிஆர். ‘இந்த கடலில் மீனை விட கத்திகளும் ரத்தமும் அதிகமாக கொட்டி கிடக்கு’ என்ற வசனத்துடன் க்ளிம்ப்ஸ் வீடியோ முடிகிறது. ரத்தம் தெறிக்கும் கொடூரமான காட்சிகளுடன் கூடிய இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ (Devara Glimpse Video) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply