Devara Part 1 Trailer : தேவரா பார்ட் 1 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

ஜூனியர் என்டிஆர் – ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவரா பார்ட் 1’ படத்தின் ட்ரெய்லர் (Devara Part 1 Trailer) தற்போது வெளியாகியுள்ளது.

தேவரா :

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவரா’ திரைப்படம் டோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். பாலிவுட்டின் முன்னணி நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூர் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார். இப்படத்தில் சைப் அலிகான், சைன் டாம் சக்கோ, கலையரசன், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜான்வி கபூர் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் சைப் அலிகானும் இந்த படத்தின் மூலம் டோலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Devara Part 1 Trailer :

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘தேவரா’ படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், படத்தின் ட்ரெய்லர் (Devara Part 1 Trailer) தற்போது வெளியாகியுள்ளது. பான் இந்தியன் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. பெரிய பட்ஜெட் படம் என்பதால் தெலுங்கானா மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட திரையரங்குகளில் ட்ரெய்லர்-ஐ வெளியிட திட்டமிட்னர். ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது.

பான் இந்தியன் படமாக வெளிவர உள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக படக்குழுவினர் ஏற்கனவே மும்பை சென்றுள்ளனர். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆர்.ஆர்.ஆர். படத்தின் சர்வதேச அளவிலான வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘தேவரா’ திரைப்படம் தெலுங்கு திரையுலக ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘தேவரா’ படத்தின் ட்ரெய்லரை (Devara Part 1 Trailer) வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று செப்டம்பர் 10ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அச்சம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டத்தின் கண்களில் தேவரா பயத்தை காட்டுகிறார். ஜூனியர் என்டிஆரின் அதிரடி ஆக்சன் படமான தேவராவின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply