Dhanush 52 Title : தனுஷ் இயக்கி நடிக்கும் 52 படத்தின் டைட்டில் வெளியீடு

நடிகர் தனுஷ் இயக்கி தானே நடிக்கும் 52 படத்தின் டைட்டில் (Dhanush 52 Title) வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் :

தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படம் கடைசியாக வெளியானது. இந்த படத்தை அவரே இயக்கவும் செய்திருந்தார். இப்படம் அவரது 50வது படமாகும். மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். இதை தொடர்ந்து தனுஷ் தற்போது, சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் தனது 52 வது படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இயக்குநரான தனுஷ் :

ராயன் படத்தின் வெற்றி தனுஷை நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த இயக்குநர் அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. குபேரா படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்தடுத்து தமிழ், இந்தி இயக்குநர்களின் படத்தில் நடிக்க உள்ளார். இதில் பலரும் எதிர்பார்த்து வரும் படமாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு நடிகராக பிசியாக இருந்தாலும் தன்னை கவரும் கதைகளை தானே இயக்கி நடித்தும் வருகிறார். ஒரே மாதிரியான கதைகளிலேயே செல்லாமல் பல்வேறு விதமான கதைகளை தேடி செல்கிறார். இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் இன்றைய தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush 52 Title :

நடிகர் தனுஷ் தற்போது, தொடர்ந்து இரு படங்களை இயக்கி வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து தனுஷ் தனது நான்காவது படத்தை இயக்கி அதில் நடித்தும் வருகிறார். தயாரிப்பாளர் சங்கம் தனுஷ் படங்களின் மீது விதித்த கட்டுப்பாடுகளை நீக்கியதைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியது. டாவ்ன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. தனுஷ், அசோக் செல்வன், நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது படத்தின் டைட்டிலை தனுஷ் அறிவித்துள்ளார். அந்தவகையில் படத்திற்கு “இட்லி கடை” என டைட்டில் (Dhanush 52 Title) வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் தற்போது இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் கிராமத்து கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply