Dhanush Getting Youth Icon Awards: 40 வயதில் யூத் ஐகான் விருது பெற்ற தனுஷ்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். காதல் கொண்டேன், பொல்லாதவன், புதுப்பேட்டை, வடசென்னை, ஆடுகளம், அசுரன் என பல தரமான படங்களில் நடித்துள்ளார். அதேபோல அவர் நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளராகவும் உள்ளார்.
நடிகராக தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல ஏராளமான விருதுகளை வென்றுள்ள தனுஷுக்கு மேலும் ஓரு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ‘CII Dakshin’ 2023 இல் தனுஷுக்கு “யூத் ஐகான்” விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனுஷுக்கு வழங்கினார். 40 வயதிலும் தனுஷ் யூத் ஐகான் விருது பெற்று ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார். தனுஷுக்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட்டபோது நடிகைகள் ஷோபனா, குஷ்பு, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில் யூத் ஐகான் விருது பெற்ற தனுஷ் தனது திரைவாழ்க்கையில் இவ்வளவு உயரத்திற்கு வருவேன் என்று நினைத்ததே இல்லை. மேலும் 40 வயதில் யூத் ஐகான் விருதை பெறுவேன் என்று ஒருபோது நினைத்தது கூட இல்லை. இன்னும் சாதிக்க நிறைய கனவுகள் உள்ளன. இந்த நேரத்தில் தனது பெற்றோர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும் எனக்கு ஒரு கனவு இருக்கிறது அதனால்தான் நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இன்னும் கனவு காண்கிறேன் என்றும் கூறினார். தனுஷ் யூத் ஐகான் விருதை பெற்றுள்ளார், விழாவில் அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த யூத் ஐகான் விருது தனுஷின் காடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே பல வித்தியாசமான சவாலான கேரக்டர்களில் நடித்து வரும் தனுஷ் மேலும் பல சாதனைகளை படைப்பார் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.