Dhanush In Jailer 2 : ஜெயிலர் 2 படத்தில் தனுஷை கொண்டு வரும் நெல்சன்

Dhanush In Jailer 2

நெல்சன் திலிப்குமாரின் ஜெயிலர் 2 (Dhanush In Jailer 2) படத்தில் நடிகர் தனுஷ் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயிலர்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜெயிலர். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு, நெல்சன் இயக்கிய இப்படம் பல கேள்விகளை கொண்டிருந்தது. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில், ஜெயிலரின் படப்பிடிப்பு தொடக்கத்தின் போதே இயக்குநரை மாற்றுமாறு விநியோகஸ்தர்கள் ரஜினியிடம் கூறியதாக ரஜினி தெரிவித்தார். ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் சுமாராக ஓட்டம் ஓடினாலே போதும் என்ற எதிர்பார்ப்பே இருந்தது. ஆனால் ஜெயிலர் படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் தாண்டி இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. நெல்சனின் டார்க் காமெடி, அனிருத்தின் இசை, ரஜினியின் ஸ்டைல் ​​என இந்தப் படத்தை ஒரு பக்கா கமர்ஷியல் படமாக செதுக்கியிருந்தார் நெல்சன். கூடுதலாக, நடிகர்கள் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரின் கேமியோக்கள் மற்ற மொழி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தந்தது.

ஜெயிலர் 2 படத்தில் தனுஷ் (Dhanush in Jailer 2)

ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர்  இரண்டாம் பாகத்திற்கு திரைக்கதையை நெல்சன் திலிப்குமார் எழுதி வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், மிர்னா, சிவராஜ்குமார் மற்றும் சில சுடுதல் நடிகர்களும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஜெயிலர் 2 படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் (Dhanush in Jailer 2) நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. தனுஷ் ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். தனுஷுக்கு அதிகப்படியாக இருந்த கமிட்மென்ட் காரணமாக படம் தாமதமாகிக் கொண்டே போனது.

மேலும் ஜெயிலர் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டுமானால், தனுஷ் (Dhanush in Jailer 2) போன்ற ஒரு நடிகரின் என்ட்ரி படத்திற்கு பெரிய ப்ளஸ் தான். ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் சாஹிர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கூலி படம் வெளியான பிறகு ஜெயிலர் 2 பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply