Dhanush Next Movie : மீண்டும் தனுஷுடன் இணையும் நித்யா மேனன்

Dhanush Next Movie :

திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷுடன் நடிகை நித்யா மேனன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ், நித்யா மேனன் முதன்முறையாக இணைந்து நடித்த படம் ‘திருச்சிற்றம்பலம்’. இப்படத்தில் நித்யா மேனன் ஷோபனவாக சிறப்பாக நடித்திருந்த நிலையில் டைட்டில் ரோலான திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்நிலையில், படத்தை தாங்கிய இவர்களது இரு கதாபாத்திரங்களின் நட்பு மற்றும் காதல் காட்சிகள் பெரிதும் ரசிக்கப்பட்டது. தனுஷ் மற்றும் நித்யா மேனன் இவர்களின் ஜோடிக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது.

மலையாள ஹீரோயின்கள் கோலிவுட் சினிமாவில் நடித்து வெளியாகும் படங்கள் அவர்களுடைய கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதாக தெரிகிறது. அந்த வகையில் நித்யா மேனன் பலருக்கும் பிடித்தமானவர். தமிழில் ஏற்கனவே ஓகே கண்மணி, மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், தனுஷின் 50வது படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் நித்யா மேனன் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush Next Movie : கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது D50 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அருண் மாதேஸ்வரனின் கேப்டன் மில்லர் மற்றும் இந்தியில் ஆனந்த் எல்.ராயின் தேரே இஷ்க் மே ஆகிய படங்கள் தனுஷின் வரிசையில் அடுத்ததாக வெளியாக உள்ளன. மறுபுறம், தனுஷ் (Dhanush Next Movie) தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். அவரது இரண்டாவது இயக்கத்தில் D50 படம் உருவாகி வருகிறது. தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது, இதன் படப்பிடிப்பு ஜூலை மாதமே தொடங்கியது.

Dhanush Next Movie : D50 படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால், சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

D50 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், மேலும் சில அப்டேட்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் ரசிகர்களை ஏங்க வைத்தார். கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்தப் படம் மூன்று சகோதரர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சுமார் 100 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

மேலும், இதுபற்றி முன்னதாக ஒரு பேட்டியில் நித்யா மேனன் கூறும்போது, ​​“தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்” என்றார். நித்யா மேனன் மீண்டும் இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply