Dhanush - Nithya Menon Reunite : மீண்டும் தனுஷுடன் இணையும் நித்யா மேனன்

தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நித்யா மேனன் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இட்லிக்கடையில் சூடாக இரண்டு டீ, மீண்டும் தனுஷுடன் ஜோடி சேரும் நித்யா மேனன் (Dhanush – Nithya Menon Reunite) மற்றும் தேசிய விருது பெற்ற கையோடு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நித்யா மேனன். நடிகர் தனுஷ் இயக்குநராக அவதாரம் எடுத்து முதல்முறையாக இயக்கி படம் பவர் பாண்டி ஆகும். இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தை எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இந்நிலையில், தனது சகோதரியின் மகனை கதையின் நாயகனாக வைத்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற காதல் படத்தை இயக்கினார்.

Dhanush - Nithya Menon Reunite :

இந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில், தனது சொந்த மாவட்டமான தேனியில் ‘இட்லி கடை’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது தனது 52வது படம் என்றும், தனது இயக்கத்தில் நான்காவது படம் என்றும் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷால் பகிரப்பட்ட, இந்த போஸ்டரில் ஒரு நட்சத்திரங்கள் இரவுக்கு எதிராக சாலையோர குடிசையில் ஒரு கடைக்காரர், மற்றொருவர் அவரைப் பார்ப்பதையும் போன்று ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகை நித்யா மேனன், நடிகர் தனுஷுடன் டீ குடிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தானும் ‘இட்லி கடை’ படத்தில் நடிப்பதை (Dhanush – Nithya Menon Reunite) உறுதி செய்துள்ளார். இந்த இட்லி கடை படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசன்னா ஜி.கே எடிட்டராக பணியாற்றுகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷின் அடுத்த படங்கள் :

கடைசியாக தனுஷ் இயக்கத்தில் அவரே நடித்து வெளிவந்த திரைப்படம் ராயன் ஆகும். இது தனுஷின் 50வது படமாகும். இதனிடையே இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் ஆகியோரும் இவருடன் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாக உள்ளது. அதையடுத்து, நடிகர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மேஸ்ட்ரோ’ என்னும் படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார். நடிகர் தனுஷ் தனது மூன்றாவது படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை அனிகா சுரேந்திரன், வெங்கடேஷ் மேனன், பவிஷ், ரம்யா ரங்கநாதன், பிரியா பிரகாஷ் வாரியர், ராபியா கட்டூன் ஆகியோரை வைத்து இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply