Dhanush Tribute To Vijayakanth : விஜயகாந்துக்கு பாடல் மூலம் அஞ்சலி செலுத்திய தனுஷ்

Dhanush Tribute To Vijayakanth :

கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு “ராசாவே உன்னை காணாத நெஞ்சு காத்தாடி காத்தாடி போலாடுது” என்ற பாடலைப் பாடி அஞ்சலி (Dhanush Tribute To Vijayakanth) செலுத்தினார். நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக வெளியாக உள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படம், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால்  நிறைந்திருக்கும் என்பது உறுதி. 1930 முதல் 40 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் கதை என்றும் தனிமனித சுதந்திரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருப்பதாகவும் அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார். மேலும், ஒரு சாதாரண மனிதன் எப்படி போராளியாக மாறுகிறார் என்பதே இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்று தெரிவித்தார்.

அஞ்சலி செலுத்திய தனுஷ் :

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இரண்டு நடிகர்களின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலாவதாக அண்மையில் மரணமடைந்த நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர் நடிகர் ஷிவராஜ்குமாரின் சகோதரர் ஆவார். இதுமட்டுமின்றி நடிகர் தனுஷ் மேடையில் பேச வரும்போது, கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பாடல் மூலம் (Dhanush Tribute To Vijayakanth) அஞ்சலி செலுத்தினார்.

கேப்டனின் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இடம்பெறும் ராசாவே உன்ன காணாத நெஞ்சு பாடலை பாடி அஞ்சலி செலுத்தினார். அந்த பாடலை தனுஷ் உடன் சேர்ந்து அங்கு வந்திருந்த ரசிகர்களும் பாடி விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவின் போது, நடிகர் தனுஷ் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லண்டன் சென்றிருந்தார். இதன் காரணமாக விஜயகாந்தின் உடலுக்கு அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு பின் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியில் கேப்டனுக்காக தனுஷ் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply