Dhoni is Going to Make History in The IPL : தோனி ஐபிஎல்லில் படைக்கப் போகும் சரித்திர சாதனைகள்

சென்னை :

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார். இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடர் என பலரும் கூறி வருகின்றனர். ஏறக்குறைய 16 ஆண்டுகளாக ஐபிஎல்-லில் இருக்கும் தோனி, இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் அவர் தனது கடைசி ஐபிஎல் தொடரில் ஐந்து மைல்கற்களை எட்டுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

கேப்டன் தோனி (Dhoni is Going to Make History in The IPL)

ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் சிஎஸ்கே அணிக்காக 5000 ரன்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை தோனி எட்டியது இதில் முக்கியமானது. தோனி தற்போது 244 போட்டிகளில் 4957 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 43 ரன்கள் சேர்த்தால் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

இதேபோல் தோனி சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்கள் உட்பட 244 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடினால், சிஎஸ்கே அணிக்காக 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெறுவார்.

சிக்ஸர்களின் மன்னன் தோனி மேலும் 11 சிக்ஸர்களை அடித்தால் ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களை அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெறுவார். முன்னதாக, அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்கள்), ரோஹித் சர்மா (257 சிக்சர்கள்), ஏபி டி வில்லியர்ஸ் (251 சிக்சர்கள்) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் இருந்தனர்.

தோனியின் மிகவும் ராசியான மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 1445 ரன்கள் இதுவரை குவித்துள்ளார். இன்னும் 55 ரன்கள் எடுப்பதன் மூலம் அந்த மைதானத்தில் மட்டும் 1500 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை முதலில் படைப்பார். தோனி 62 போட்டிகளில் 55 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1445 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 42.50 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 145.52. சிறந்த விக்கெட் கீப்பரான தோனி மேலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெறுவார்.

Latest Slideshows

Leave a Reply