Dhruv Instead Of Bharat : இளம் விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

ராஜ்கோட் :

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக அறிமுகம் (Dhruv Instead Of Bharat) செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் அனைவரும் ராஜ்கோட் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் உள்ளிட்டோர் நேற்று இரவு மும்பையில் இருந்து ராஜ்கோட் சென்றனர்.

Dhruv Instead Of Bharat :

இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை எளிதாக கைப்பற்றும். இதனால் இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனிடையே 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெரும் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் (Dhruv Instead Of Bharat) வெளியாகியுள்ளது. முதல் 2 டெஸ்டில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கே.எஸ்.பரத் 92 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதுமட்டுமின்றி இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கே.எஸ்.பாரத் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகிய நிலையில், கே.எஸ்.பரத், இந்திய தரப்பில் கிடைத்த தொடர் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் கூட மோசமான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தார். அதேபோல் விக்கெட் கீப்பராக நல்ல கேட்சுகளை எடுத்தாலும் டி.ஆர்.எஸ் அப்பீலில் ரோஹித் சர்மாவுக்கு மோசமான அறிவுரைகளை வழங்கி வருகிறார். இதன் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் துருவ் ஜூரேலுக்கு வாய்ப்பு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ரஞ்சி டிராபி போட்டிகளில் உத்தரபிரதேச அணியின் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட துருவ் ஜூரல், ஐபிஎல் தொடரிலும் விக்கெட் கீப்பராக கவனம் ஈர்த்துள்ளார். இந்தியா அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்த அனுபவமும் அவருக்கு உண்டு. துருவ் ஜூரலுக்கு அவரது அச்சமற்ற பேட்டிங் திறமையால் வாய்ப்பு வழங்கப்படும் (Dhruv Instead Of Bharat) என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply