Dhruva Natchathiram Part 1: யுத்த காண்டமாக வெளியாகும் "துருவ நட்சத்திரம்"
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சித்திரம் ஆகும்.
விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற படங்கள் வெளியானது. இயக்குனர் மணிரத்னம் இயக்கதில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகமானது வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விக்ரம் தற்போது ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்ரமின் 61வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் கே.ஜி.எப் பற்றிய உண்மை வரலாற்றை சொல்லும் வகையில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. ‘தங்கலான்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி பல வருடங்களாக கிடப்பில் உள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி துருவ நட்சத்திரம் படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டது. மேலும் போஸ்டரில் துருவ நட்சத்திரம் சாப்டர்- 1 யுத்த காண்டம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முன் விக்ரம் நடித்த சாமி படம் இரண்டு பாகங்களாக வெளியானது. அதையடுத்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும் நிலையில் துருவ நட்சத்திரமும் இரண்டு பாகங்களாக வெளிவருவதை படக்குழு உறுதி செய்துள்ளது.
மே மாதம் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் மே முதல் ஜூலை வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் விக்ரமுடன் டிடி, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைத்துள்ளார்.