Dhruva Natchathiram Second Single: துருவ நட்சத்திரம் படத்தின் 2-வது சிங்கிள் வெளியீடு…

துருவ நட்சத்திரம் 2-வது சிங்கிள் வெளியீடு

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

விக்ரமை வைத்து இயக்குனர் கௌதம் வாசு தேவ் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரிது வர்மா நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைக்கிறார். 2017ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடரந்து படத்தின் அடுத்த அப்டேட் தெரியவில்லை.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட பதிவில், “துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்குகளில் சந்திக்கலாம்” என்று தெரிவித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் – கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் பாடலின் ப்ரோமோ (18/7/2023) காலை 11 மணிக்கு வெளியானது. இந்த வீடியோவில் துருவ நட்சத்திரம் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்பது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றன. இந்த நிலையில், இப்படத்தின் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ என்று தொடங்கும் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை டப்பா என்பவர் எழுதி பாடியுள்ளார். 3:53 நிமிடம் ஓடக்கூடிய இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘அவன் போறான் ஃபிளைட்டுல.. இப்போ பறந்துபுட்டான் ஹைட்டுல.. உன்ன போட போறான் காட்டுல.. அவன் கையில இன்னும் நீ மாட்டல… என்ற பாடல் வரிகள் துள்ளலான இசையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply