Dhruva Natchathiram Trailer : துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு...

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை (Dhruva Natchathiram Trailer) ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் “தங்கலான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்கலான் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்‘ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கௌதம் மேனன்-விக்ரம் கூட்டணியில் 2017ஆம் ஆண்டு வெளியான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கி 2018-ல் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை வெளியிட படக்குழு நீண்ட நாட்களாக உழைத்து வருகிறது. இப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை (Dhruva Natchathiram Trailer) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Dhruva Natchathiram Trailer :

2008 மும்பை தாக்குதலின் போது, ​​பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிட பல விதிகளைப் பின்பற்ற வேண்டியிருந்ததால், எந்த விதிகளும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத ‘பேஸ்மென்ட்’ என்ற குழு உருவாக்கப்பட்டது. விக்ரம் தலைமையிலான குழுவில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், டிடி, மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் உள்ளனர். பல ஆண்டுகள் தாமதமாக வெளியானாலும், ட்ரெய்லரில் (Dhruva Natchathiram Trailer) காட்டப்பட்டுள்ள காட்சிகள் பயங்கரமாக உள்ளது. விக்ரம் படு ஸ்டைலாக இருக்கிறார். இந்த நடிகர்கள் அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா? அல்லது இப்போது வரும் படங்களைப் போல பெயருக்கு மட்டும் பயன்படுத்துகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் (Dhruva Natchathiram Trailer) இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply