Digi Yatra Launched At Chennai Airport : டிஜியாத்ரா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Digi Yatra Launched At Chennai Airport :
நேற்று மார்ச் 31ம் தேதி முதல் சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா (Digi Yatra) திட்டம் (Digi Yatra Launched At Chennai Airport) துவங்கப்பட்டுள்ளது. டிஜியாத்ரா திட்டத்தின் நன்மைகள் மற்றும் இதை எப்படி தமிழக மக்கள் எளிமையாக எப்படி பயன்படுத்தலாம் என்ற முழு விவரத்தை பார்க்கலாம்.
டிஜியாத்ரா (Digi Yatra) திட்டம் :
மத்திய விமான நிலைய ஆணையம் (Ministry Of Civil Aviation India) கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் துவங்கப்பட்ட டிஜிட்டல் பயணமுறை திட்டம் தான் இந்த DigiYatra திட்டம். முழுவதுமாக விமான பயண (Flight Traveling) செயல்முறைகளை காகிதமற்ற செயல்முறையாக மாற்றும் முயற்சியின் வெற்றி திட்டம் தான் இந்த டிஜியாத்ரா. விமான பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழைவதில் தொடங்கி பாதுகாப்பாக செக்கின் (Check-In) செய்து விமானத்தில் உள்ளே ஏறுவது வரை தேவைப்படும் அனைத்து விதமான சோதனைகளுக்கும் உங்கள் முகத்தை (Face) மட்டும் காண்பித்தால் போதுமானது. விமான பயணத்தில் நீங்கள் எடுத்து செல்லும் பொருட்களை சரிபார்ப்பதற்கும் நீங்கள் இந்த டிஜியாத்ரா செயல்முறையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜியாத்ரா திட்டம் அமல்படுத்தப்பட விமான நிலையங்களுக்குள் நீங்கள் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை இனி காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, டிஜி யாத்ராவுடன் இணைந்து செல்லும் டிஜி யாத்ரா மொபைல் ஆப்ஸ் மூலம் உங்கள் பயணத் தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படும். இதனுடன் உங்கள் பாஸ்போர்ட் முழு விவரம் மற்றும் முக அங்கீகார (Face Recognition) விவரங்கள் இணைக்கப்படும். இதன் காரணமாக இனி எந்த ஆவணத்தையும் காண்பிக்காமல் பயணிகள் தங்களுடைய முகத்தை மட்டும் காண்பித்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. டிஜியாத்ரா திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும் 14-வது சர்வதேச விமான நிலையமாக சென்னை விமான நிலையம் (Chennai Airport) நேற்று மார்ச் 31 ஆம் தேதி முதல் (Digi Yatra Launched At Chennai Airport) செயல்படவுள்ளது. நேற்று முதல் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு அல்லது பிற அரசு ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது டெல்லி, பெங்களூர், வாரணாசி உட்பட 10 இடங்களில் டிஜியாத்ரா திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த வரிசையில் சென்னை விமான நிலையம் (Digi Yatra Launched At Chennai Airport) சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முக அங்கீகார அம்சத்தை ஆதரிக்கும் டிஜியாத்ரா (Digi Yatra) மொபைல் ஆப்ஸை தற்போது சுமார் 4.58 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் சுமார் 2.12 மில்லியன் பயனர்கள் ஆண்ட்ராய்டு (Android) டிஜியாத்ரா ஆப்ஸ் பயனர்கள் என்றும் 2.46 மில்லியன் பயனர்கள் iOS டிஜியாத்ரா ஆப்ஸ் பயனர்கள் என்றும் கணக்கெடுப்பு சொல்கிறது.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்