Director Ameer Talks About ED Raid : எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார்

என் மீதான குற்றச்சாட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிப்பேன், இதுபற்றி விரைவில் ஒரு நாள் பேசுவேன், நான் இப்போது சொல்கிறேன் எந்த விசாரணைக்கும் நான் தயார் என்று இயக்குனர் அமீர் (Director Ameer Talks About ED Raid) தெரிவித்துள்ளார்.

அமீர் வீட்டில் சோதனை :

திமுக முன்னாள் நிர்வாகியும் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரது தயாரிப்பில் இயக்குனர் அமீர் இறைவன் பெரியவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், ஜாபர் சாதிக்குடன் இயக்குனர் அமீருக்கு தொடர்பு இருந்ததால், அவரை டெல்லிக்கு அழைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து நேற்று அமீர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார்.

Director Ameer Talks About ED Raid :

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர், “ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு நோற்று இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். இதையடுத்து, வீட்டில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்ற கேள்விக்கு (Director Ameer Talks About ED Raid) பதிலளித்த அவர், அமலாக்கத் துறை ரெய்டில், “அவர்கள் என்ன எடுத்தார்கள் என்பதை என்னால் கூற முடியாது, NCB 11 மணி நேர விசாரணை மற்றும் ED ரெய்டு நடந்தது உண்மைதான், ஆனால் அவர்கள் என்ன எடுத்தார்கள் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் நான் சொல்வது ஒன்றுதான் எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிப்பேன். இறைவன் மிகப்பெரியவன் என்பதுதான் என்னிடம் வரும் வார்த்தை என கூறினார்.

போதைப்பொருள் விசாரணை எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. என்னுடன் பயணித்தவர் மீது இவ்வளவு பெரிய குற்றம் உள்ளது. குற்றப் பின்னணி கொண்ட என் மீது விழும் சந்தேகத்தின் நிழல் தப்பவில்லை. என் மீது எந்த சந்தேகமும் வேண்டாம் என்று சொல்லமுடியாது. நான் ஒரு குற்றவாளியுடன் பயணம் செய்ததால் என்னை விசாரிக்கப்பட்டதில் நியாயம் உள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சில பிரச்சனைகள் உள்ளன. இந்த சம்பவம் குறித்து எதுவும் தெரியாதவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் இஷ்டத்துக்கு கதைத்து வருகின்றனர். அதற்கெல்லாம் விரைவில் முடிவு வரும் என்றார். அமலாக்கத்துறையின் விசாரணை நியாயமானதா? என்ற கேள்விக்கு, விசாரணை நியாயமானது. விசாரணைக்கு அழுத்தம் உள்ளதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ED சோதனை முடிந்தது. விசாரணை நடந்து வருகிறது. எனவே இதை முழுமையாக விவாதிக்க எனக்கு சிறிது நேரம் கொடுங்கள் என தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply