Director Atlee : ஜவான் படத்தில் விஜய் நடிக்காதது ஏன்?

Director Atlee பகிர்ந்த தகவல் :

நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஜவான் திரைப்படம் கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் வெளியானது. இந்தப் படத்தின் வசூல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் Director Atlee சமீபத்தில் அளித்த பேட்டியில் படம் குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டின் கிங் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இந்த வருடம் இவரது நடிப்பில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. ஷாருக்கான் கடந்த 4 ஆண்டுகளாக தனது மகன் கைது உள்ளிட்ட பல பிரச்சனைகளில் சிக்கினார். இதனால் அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த ஜனவரியில் வெளியான பதான் திரைப்படம் அவருக்கு மாபெரும் வசூலை தந்தது. இப்படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான்-அட்லீயின் ஜவான் படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் ஜவான் படம் வெளியாகி தற்போது வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் வசூல் விரைவில் 1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சஞ்சய் தத், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியா மணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. விஜய் ரசிகர்களும் இதை எதிர்பார்த்து காத்திருந்தனர். அட்லீக்கும் விஜய்க்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால் விஜய் கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெறும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இவை எதுவும் நடக்காததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இது குறித்து Director Atlee தனது சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். ஜவான் படப்பிடிப்பின் முதல் நாள் முதல் காட்சி அமைப்புகள், ஷெட்யூல்கள் போன்றவற்றில் விஜய்யிடம் ஆலோசனை கேட்டுள்ளதாகவும், அவர் தனக்கு சகோதரன் போன்றவர் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யுடன் இணைவேன் இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் Director Atlee தெரிவித்துள்ளார். தான் இதுவரை இயக்கிய 5 படங்களில் 3 படங்கள் விஜய்யுடன் இணைந்தவை என்றும், அவர் எப்போதும் தன்னுடைய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளித்து வருவதாகவும் கூறியுள்ளார். விஜய் மற்றும் ஷாருக்கை வைத்து புதிய கதை எழுத இருப்பதாகவும், அது விரைவில் நடக்கும் என்றும் அட்லீ கூறியுள்ளார். அதனால் தான் ஜவான் படத்தில் விஜய்யை கேமியோ ரோலில் நடிக்க கேட்கவில்லை என்று கூறிய அட்லீ, விரைவில் இருவரும் இணைந்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார் Director Atlee. முதல் படம் ஷாருக்கானுடன் அமைந்த நிலையில், அதை மிகச் சரியாகப் பயன்படுத்தி ஹிட் கொடுத்துள்ளார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் விஜய்-ஷாருக்கான் இணைவதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply