Director Lokesh Kanagaraj as The Hero : ஹீரோவாக களமிறங்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவரது கடைசி படமான லியோ விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்நிலையில் (Director Lokesh Kanagaraj as The Hero) ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இது குறித்த அப்டேட் ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருக்கிறார். அவரது முதல் நான்கு படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான லியோ விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், பொது ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டது. அதனால் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு லியோ படம்தான் முதல் சறுக்கலாகக் கருதப்படுகிறது.

லியோ படத்தை முடித்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மார்ச் அல்லது ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும் என லோகேஷ் கூறியுள்ளார். லியோ படத்தில் எதிர்கொண்ட விமர்சனங்களை தலைவர் 171ல்  நிச்சயம் சரி செய்வார் என்று நம்பப்படுகிறது.

ஹீரோவாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj as The Hero)

 இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த லோகேஷ் கனகராஜ், நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலோன் படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றிய அவர், அன்பரிவ் இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதில் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பது சந்தேகம் என்றுதான் கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj as The Hero) ஹீரோவாகிறார். ஆனால் படத்தில் அல்ல, ஒரு ஆல்பத்தில்.

கமல்ஹாசனின் மகளும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் ‘இனிமேல்’ என்ற சுயாதீன பாடலை உருவாக்கியுள்ளார். இவரே இசைமைத்து பாடியிருக்கும் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலில்தான் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் தோன்றியுள்ளனர். இந்த பாடலை கமல்ஹாசன் எழுதியது மட்டுமின்றி, தயாரிப்பாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply