Discovered A New Planet : பூமி மாதிரியே இருக்கும் புது கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

பூமி போல இருக்கும் மற்றொரு கிரகத்தை சுமார் 4000 ஒளியாண்டுகள் தூரத்தில் (Discovered A New Planet) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த புதிய கிரகத்தில் மனிதர்களால் உயிர் வாழ முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்வெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவை தொடர்பாக பல ஆய்வுகளை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.

4000 ஒளி ஆண்டுகள்

சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 4000 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை போலவே இருக்கும் புதிய கிரகத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒளியின் வேகத்தில் 4000 ஆண்டுகள் பயணித்தால் இந்த கிரகத்திற்கு செல்லலாம். இந்த புதிய கிரகம் நம் பூமியைப் போலவே ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

மனிதர்களாகிய நாம் சூரிய குடும்பம் எனும் அமைப்பில் வாழ்ந்து வருகிறோம். இந்த சூரிய குடும்பம் சூரியனை மையமாக வைத்து இயங்கி வருகிறது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆரம்பம் மற்றும் அழிவு இருக்கிறது. மேலும் சூரியன் என்பது ஒரு நட்சத்திரமாகும். அந்த வகையில் இன்னும் 400 கோடி ஆண்டுகளில் நமது சூரியன் அழிந்துவிடும் என ஆரய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர். அப்படி நடந்தால் நமது பூமியும் அழிந்துவிடும். இந்த அழிவில் இருந்து காத்துக்கொள்ள நாம் புதிய உலகத்தை (Discovered A New Planet) கண்டுபிடிக்க வேண்டும்.

புதிய கிரகம் KMT-2020-BLG-0414 (Discovered A New Planet)

வியாழனின் துணைக்கோளான கனிமீடு, யூரோப்பா போன்ற நிலவுகளில் மனிதர்களால் வாழ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்த துணைக்கோள்களில் அடிப்படை தேவையான நீர் இல்லை. விஞ்ஞானிகள் இதை விட சிறந்த கிரகம் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்து வந்தனர். இந்த ஆய்வின் முடிவில் KMT-2020-BLG-0414 எனும் புதிய கோளை கண்டுபிடித்துள்ளனர்.      

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கெக் தொலைநோக்கியை பயன்படுத்தி இந்த கிரகத்தை (Discovered A New Planet) கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது இந்த KMT-2020-BLG-0414 கிரகம் பூமியை போலவே உள்ளது. மேலும் இந்த கிரகத்தில் நீரும், தரைப்பகுதியும் இருக்கிறது. மேலும் பூமியில் இருந்து 4000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதால் இங்கு செல்ல ஒளியின் வேகத்தில் விண்கலத்தை உருவாக்க வேண்டும். தற்போது வரை உலகில் இப்படிப்பட்ட விண்கலத்தை மனிதர்கள் உருவாக்கவில்லை. இதற்கு தேவையான ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply