Discovery Of Black Hole : சூரிய குடும்பத்தை விட மிகப்பெரிய கருந்துளையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

Discovery Of Black Hole

விண்வெளியில் நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே ஏராளமான கருந்துளைகள் (Black Hole) உள்ளன. ஆனால் தற்போது இவை அனைத்தையும் சிறிதாக தோன்றவைக்கும் அளவுக்கு பெரிய கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எல்லா பெரிய நட்சத்திர மண்டலமும் கிட்டத்தட்ட தன் மையத்தில் ஒரு பெரிய கருந்துளைகளை கொண்டுள்ளது. மேலும் நமது நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் உள்ள கருந்துளை Sagittarius A என அழைக்கப்படுகிறது. மேலும் இது மிகவும் எடை குறைந்தது.   

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ‘அல்ட்ராமாஸிவ் ப்ளாக் ஹோல்ஸ்’ என அழைக்கப்படும் மிகப்பெரிய கருந்துளை உட்பட பல கருந்துளைகளை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சில கருந்துளைகள் சஜிடேரியஸ் ஏ-வை விட அளவில் பல ஆயிரம் மடங்கு பெரியவையாகும். மேலும் அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பிரமாண்டமான இந்த கருந்துளைகள் எப்படி தோன்றின என்பதை பற்றி அறிய நமக்கு புதிய தகவல்களை வழங்குகிறது.

மிகப்பெரிய கருந்துளை (Discovery Of Black Hole)

கருந்துளைகளின் அளவை (கணிக்க இயலாது) மதிப்பிடுவது என்பது அவ்வளவு எளிமையானது அல்ல. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளில் மிகவும் பெரியது “டான் 618” கருந்துளை (Discovery Of Black Hole) ஆகும். இது பூமியில் இருந்து 18 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் சூரியனை விட 66 பில்லியன் எடை கொண்டது. மேலும் சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடையே இருக்கும் தூரத்தை விட 40 மடங்கு அகலம் கொண்டது.      

நமது பால்வெளி குழுமங்களின் மத்தியில் Home 15A என்ற கருந்துளை உள்ளது. இதன் எடையானது சூரியனைவிட 44 பில்லியன் என்றும் அதன் தூரம் நெப்டியூனுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும் என சமீபத்தில் கணிக்கப்பட்டது. தற்போது இதனை விட பெரிய கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   

இங்கிலாந்து பல்கலைகழகத்தில் பணியாற்றும் அண்டவியல் நிபுணரான ஜேம்ஸ் நைட்டிங் என்பவர் ‘கோட்பாடுகள் என்ற கோணத்தில் பார்த்தால் கருந்துளைகளின் அளவு இவ்வளவுதான் என்று மதிப்பிட முடியாது’ என கூறுகிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு நமது சூரியனைப் போல 33 பில்லியன் அதிக எடை கொண்ட கருந்துளையை கண்டுபிடித்தவர் ஆவர்.

Latest Slideshows

Leave a Reply