Disney And Reliance Mega Merger : மெகா இணைப்பு - Reliance Industries + Walt Disney

Disney And Reliance Mega Merger :

  • வால்ட் டிஸ்னி ஆனது உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். கடும் வர்த்தக நெருக்கடியில் இருக்கும் காரணத்தால் வால்ட் டிஸ்னி  சமீபத்தில் இந்தியாவின் வர்த்தகத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டுப் பல முன்னணி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கடைசியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு விற்பனை செய்வதாகத் தற்போது தகவல் (Disney And Reliance Mega Merger) வெளியாகியுள்ளது.
  • வால்ட் டிஸ்னி சக போட்டியாளரைக் கூட்டாளியாக்கிக்கொள்ள முடிவு செய்து எடுத்த பல கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, வால்ட் டிஸ்னி – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்த இந்த கூட்டணி ஆனது வெற்றி (Disney And Reliance Mega Merger) பெற்றுள்ளது.

Reliance Industries + Walt Disney - Non-Binding Agreement :

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – வால்ட் டிஸ்னி மத்தியிலான கடந்த சில கால பேச்சுவார்த்தை உறுதியான நிலையில் கடந்த வாரம் லண்டனில் இரு நிறுவனங்கள் மத்தியிலும் Non-Binding ஒப்பந்தம் ஆனது (Disney And Reliance Mega Merger) கையெழுத்தாகியுள்ளது. இது ஒரு உறுதியான இணைக்கப்படுவதற்கான ஒப்பந்தம் இல்லை. இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான சாத்தியக்கூறுகள் ஆனது இந்த ஒப்பந்தம் மூலம் ஆராயப்படும். இறுதி முடிவுகள் குறித்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஆனது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இணைப்பு (Disney And Reliance Mega Merger) வெற்றி அடைந்தால் வால்ட் டிஸ்னியின் இந்திய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆதிக்கம் பெறும் அளவிலான பங்குகளைப் பெற உள்ளது. இந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இணைக்கப்பட்ட நிறுவனத்தில் (Disney And Reliance Mega Merger) ரிலையன்ஸ் 51% பங்குகளும், டிஸ்னி 49% பங்குகளும் கொண்டு இருக்கும்.

மேலும் இணைப்பிற்குப் பின்பு 1 -1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரு தரப்பில் இருந்தும் வரவில்லை. இதற்காக ரிலையன்ஸ் வாய்காம் 18 கீழ் தனிக் கிளை நிறுவனத்தை உருவாக்கி பங்கு பரிமாற்றம் மற்றும் ரிலையன்ஸ் ஆதிக்கம் பெறும் அளவுக்குப் பங்குகளைப் பெற கூடுதல் நிதி பரிமாற்றம் வாயிலாக இந்த இணைப்பை முடிக்கவும் பேச்சுவார்த்தை ஆனது நடந்து வருகிறது. ரிலையன்ஸ் வாய்காம் 18 மற்றும் வால்ட் டிஸ்னி இணைக்கப்பட்டால் இக்கூட்டணியில் சுமார் 115 டிவி சேனல்கள் இருக்கும் (ஸ்டார் இந்தியாவின் 77 சேனல்கள், வாய்கம் 18 கீழ் 38 சேனல்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா போன்ற இரு ஸ்ட்ரீமிங் சேனல்கள் இக்கூட்டணியில் இருக்கும்.

Reliance Gio இலவச சேவை மூலம் மாபெரும் டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து உள்ளது :

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதீத பண பலம் காரணமாக இலவச சேவைகளைக் கொடுத்து அனைத்து துறையிலும் ஆதிக்கம் பெற்று வருகிறார். ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவை மூலம் தற்போது மாபெரும் டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து ஏர்டெல் நிறுவனத்தை ஓரம் கட்டியது. கடந்த 10 வருடமாகக் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தை விடுத்து பல துறைகளில் இறங்கி வருகிறது. முகேஷ் அம்பானி முக்கியமாக மீடியா துறையை மையமாக வைத்து களமிறங்கினார். ஏற்கனவே வயாகாம்18 மூலம் பெரும் மீடியா வர்த்தகத்தை வைத்திருந்தாலும், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் துறையிலும், ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு துறையிலும் பெரும் வர்த்தகத்தை அள்ள வேண்டும் எனத் திட்டமிட்டு ஜியோ சினிமா தளத்தைப் பெரும் முதலீட்டு உடன் துவங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது மீடியா மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகத்தை இணைக்கும் திட்டத்திலும் ஈடுபட்டு உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் வாய்காம்18 கூட்டணி மொத்தமாக வால்ட் டிஸ்னி இந்தியா உடன் இணைய உள்ளது. இந்த இணைப்பு மூலம் இந்திய மீடியா துறையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை ரிலையன்ஸ் அடைய உள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் ஸ்டார் இந்தியா 19,857 கோடி ரூபாய் வருமானமும், வாய்காம்18 வருவாய் 4554 கோடி ரூபாய் வருமானமும், நோவி டிஜிட்டல் (டிஸ்னி + ஹாட்ஸ்டார்) 4,341 கோடி ரூபாய் வருமானமும் கொண்டு உள்ளது.

Latest Slideshows

Leave a Reply