Do It Today Book Review - இன்றே செய்யுங்கள்!

எல்லா வேலைகளையும் நாளைக்கு செய்வோம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால் இந்த Do It Today இதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் உங்களுக்கு நல்ல பாடங்களை சொல்லிக்கொடுக்கும். நாளை வராது என்ற எண்ணத்தில் நாம் வாழும்போது அன்றைக்கு முடிக்கும் வேலைகளை அன்றைக்கே முடித்து விடுவோம். டூ இட் டுடே எதை செய்தாலும் இன்றைக்கே செய் என்று ஆர்தர் வலியுறுத்தியுள்ளார். ஆர்தர் டேரியஸ் இந்த புத்தகத்தை 3 பாகமாக எழுதியுள்ளார்.

Overcoming Procrastination (தள்ளிப்போடுதலை சமாளித்தல்):

நாளை நாளை என்று எல்லா விஷயங்களையும் தள்ளிப்போடும் பழக்கத்தை எப்படி கடந்து வந்து முன்னேற வேண்டும் என்பதை இந்த பாகத்தில் ஆர்தர் தெளிவுப்படுத்துகிறார். இன்றைக்கான வேலைகளை இன்றே செய்யுங்கள் நாளைக்கு செய்யலாம் என்று தள்ளி போடாதீர்கள். இந்த தள்ளிப்போடும் குணத்தை எப்படி மாற்றுவது என்றால் அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.

உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள், எண்ணங்களை கட்டுப்படுத்துங்கள், உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள் தினமும் இந்த பழக்கங்களை மேற்கொள்வேன் என்று ஒரு பட்டியலிட்டு அவற்றை விடாமல் தினமும் பின்பற்றுங்கள். அந்த நாளில் நீங்கள் என்னென்ன டாஸ்குகளை செய்ய வேண்டுமோ அதற்கெல்லாம் ஒரு அட்டவணை உருவாக்குங்கள். அந்த அட்டவணையின் படி அவற்றை பின்பற்றுங்கள்.

இதுமாதிரியான விஷயங்களை பின்பற்றும்போது, எதையுமே தள்ளிப்போடும் பழக்கம் உங்களுக்குள் வளராது. அதுமட்டுமில்லாமல் நாம் தெளிவாக கவனம் செலுத்தும்போது கண்டிப்பாக நம்மால் தள்ளிப்போடுதலில் இருந்து வெளி வரமுடியும். உங்களுக்கு கவனம் அதிகமாகவேண்டும் என்றால் அதற்கு இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும்.

Eliminate, Eliminate, Eliminate - ஒழிக்க வேண்டும்:

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் தேவை இல்லாத விஷயங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தை குறைத்துக்கொள்ளும்போது மீதமுள்ள முக்கியமான வேலைகளை செய்ய நேரம் அதிகம் கிடைக்கும்.இதனால் தேவையான விஷயங்களை மட்டும் பார்க்கும்போது கவனம் மற்றும் ஆர்வம் அதிகமாகும்.

Think About Past Success - கடந்த கால வெற்றியைப் பற்றி சிந்தியுங்கள்

நம்முடைய முன்வாழ்க்கையில்  நாம் பார்த்த வெற்றிகளைப் பற்றி சிந்திக்கும்போது நமக்கு அவ்வளவு சந்தோஷங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் ரசித்து கொண்டாடுங்கள். அப்போது தான் வாழ்க்கை முழுவதும் இதே சந்தோஷம் இருக்க வேண்டும் என்னும் ஆசையில் வெற்றியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இந்த இரண்டு விஷயங்களை செய்யும்போது உங்கள் கவனம் அதிகரிக்கும்.

Effects Of Procrastination (காலதாமதத்தின் விளைவுகள்):

ஒரு விஷயத்தை தள்ளிப்போடுவது என்பது குறுகிய காலத்தில் எளிதில் செய்து விட முடுயும். அதற்கான பாதிப்பு காலம் முழுக்க இருக்கும். எல்லா விஷயங்களையும் தள்ளி போடுவதால் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுகிறோம். ஒரு வேலை கடினமாக இருக்கும்போதுதான் அவற்றை செய்வதற்கு தள்ளி போடுகிறோம். எனவே ஒரு வேலையை செய்வதற்கு முன்பு அவற்றை செய்ய முடியுமா என்று பகுப்பாய்வு செய்து அதன் பிறகு அந்த வேலையை செய்யும்போது தள்ளிப்போடுதலை தவிர்க்க முடியும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யும்போது உங்களுடைய இலக்குகளை நெருங்குவதற்கு எளிமையான  வேலை செய்யும்போது கண்டிப்பாக தள்ளிப்போடுதலை தோற்கடிக்க முடியும்.

Spend your time without wasting (நேரத்தை வீணாக்காமல் செலவிடுங்கள்):

நேரத்தை தேவை இல்லாமல் வீணடிக்க கூடாது. உங்கள் நேரத்தை சரியாக செலவிட வேண்டும். நேரத்தை அட்டவணை போட்டு செலவிட வேண்டும். நீங்கள் எவற்றில் நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதை குறித்து வைக்க வேண்டும். நேரத்தை சரியாக செலவிடுகிறோமா என்பதை குறிப்பெடுத்து பின்பற்றும்போது கண்டிப்பாக நம்மிடம் நேரத்தை வீணடிக்கும் பழக்கம் ஏற்படாது. நமக்கு நேரத்தை நிர்வகிக்கும் திறனும் வந்துவிடும். எந்த வேலைகள் நமக்கு தேவை அற்றதாக இருக்கிறதோ, எந்த வேலைகள் நேரத்தை வீணடிக்கிறதோ அந்த வேலைகளை குறித்து வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையில் இருந்தே நீக்கி விடுங்கள். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே நம் நேரத்தை சிறப்பாக செலவழிக்க முடியும்.

Things that make you effectively (உங்களை திறம்பட செய்யும் விஷயங்கள்):

உங்கள் வேலைகளுக்கு நீங்கள் வைக்கின்ற காலக்கெடு, எல்லா செயல்களையும் குறித்து வைத்து கொள்வது, ஒரே சமயத்தில் வேலை பார்க்காமல் இடைவேளை எடுத்து வேலை செய்வது, 13 நிமிடம் பயிற்சி மேற்கொள்வது, சத்தான உணவுமுறைகளை மேற்கொள்வது, கவனச்சிதறல்களை தவிர்ப்பது, உங்களுக்கு நீங்களே ஊக்கமூட்டிக கொள்வது இவற்றை எல்லாம் செய்யும்போது நீங்கள் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள்.

உங்கள் வேலைகளை திட்டமிட்டு அதன்படி செய்யுங்கள். கடுமையாக உழைக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். அதிகமான கவனம் இருந்தால் செய்கின்ற வேலையை பிடித்து செய்தால், நேரத்தை சரியாக நிர்வகித்தால் கண்டிப்பாக காலதாமதத்தை தோற்கடிக்க முடியும். என்பதைத்தான் இந்த முதல் அத்தியாயத்தில் ஆர்தர் விளக்கியுள்ளார்.

Improving productivity (உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்):

உங்கள் உற்பத்தி திறனை பாதிக்கும் விஷயங்களில் முதல் இடத்தை பிடிப்பது உங்கள் ஸ்மார்ட் போன்கள்தான். இவற்றை சரியாக பயன்படுத்துங்கள் எல்லையை மீறி பயன்படுத்தும்போது நேரம் முழுக்க அதிலே வீணாகிவிடும். தேவையற்ற செயலிகளை நீக்கிவிடுங்கள். கற்று கொள்வதற்காகவும், முக்கியமான அழைப்புகளுக்காகவும், முக்கியமான மெசேஜ்களுக்காகவும் போனை பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் போன் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.மேலும் அதிகமாக வேலை செய்துகொண்டிருந்தால் மன அழுத்தம் ஏற்படும். அதனால் சிறிது ஓய்வும் எடுக்க வேண்டும்.

நல்ல இடங்களுக்கு பயணம் மேற்கொள்வது நல்லது. எப்போது நம் ஓய்விற்கு நேரம் ஒதுக்கலாம் என்று திட்டமிடுங்கள், எப்போதெல்லாம் நமக்கு நேரத்தை செலவிடுகிறோமோ அப்போதெல்லாம் மன அழுத்தம் இன்றி வேலை செய்யலாம். நம்முடைய உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.

Time blocking (நேரத் தடை):

நேரத்தடையைப் பற்றி ஆர்தர் பேசியுள்ளார். இந்த நாளில் இந்த நேரத்தில் இந்த வேலையைத்தான் செய்வேன் என்று நேரத்தை குறித்து வைக்கும் பழக்கம். இது இருந்தால் நம் கவனமும் அதிகரிக்கும். செய்த வேலையும் சிறப்பாக முடியும். உங்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறந்த பயிற்சி இந்த நேர தடைதான். முக்கியமான வேலைகளை பட்டியலிட்டு அவற்றை செய்து முடிக்கும் கால அளவையும் குறித்து வைத்து கொண்டால் செய்யும் வேலை சீக்கிரம் முடிவது மட்டுமில்லாமல், கவனத்துடனும் செய்து முடிக்க முடியும். இதனால் நேரம் கடத்துதலும் தவிர்க்கப்படும்.

இடைவேளை இல்லாமலும் வேலை பார்க்கக்கூடாது. அப்படி தொடர்ந்து வேலை பார்த்தாலும் உற்பத்தி திறன் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே உங்கள் உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டுமென்றால் அட்டவணைப் படுத்தி வேலை பார்க்க வேண்டும். இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும். செய்யும் வேலையை பிடித்து மகிழ்வுடன் செய்ய வேண்டும். உற்பத்தி திறனை அதிகரிக்க சில முக்கிய விஷயங்களை தெளிவான முறையில் சொல்லி இரண்டாம் பாகத்தை ஆர்தர் முடிக்கிறார்.

Achieving more (மேலும் அடைதல்):

இந்த உலகில் எதுவும் நிலையானது கிடையாது என்று புரிந்து கொள்ளவேண்டும். நிலையில்லாத உலகில் கிடைக்கும் சிறு சந்தோஷங்களையும், வெற்றியையும் கொண்டாட வேண்டும். புது விஷயங்களில் சாதனை படைக்க வேண்டும் என்கிற சிந்தனையுடன் ஒவ்வொரு நிமிடமும் செயல்பட வேண்டும். எந்த பாதையில் பயணிக்க வேண்டும், எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்று கவனமாக முடிவெடுங்கள். என்று ஆர்தர் சொல்கிறார்.

Universal skills - உலகளாவிய திறன்கள்:

நீங்கள் அதிகம் சாதிக்க நினைத்தால் உலகளாவிய திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்.

1. Self-Discipline (சுய ஒழுக்கம்):

சுய ஒழுக்கத்தை சரியாக பாதுகாக்க வேண்டும். சோர்வாக இல்லாமல் எல்லா வேலைகளையும் சரியாக செய்ய வேண்டும். உங்களால் முடியாது என்கிற எதிர்மறை எண்ணம் ஏற்பட்டால் அவற்றை தவிர்த்து விடுங்கள்.

2. Personal effectiveness (தனிப்பட்ட செயல்திறன்):

நீங்கள் சிறுது நேரம் செயல்படும் வேலைகளில் கூட அதிக திறமையுடன் செயலாற்றுங்கள்.

3. Communication (தகவல் பரிமாற்றம்):

நன்றாக பேச தெரியும் என்று நினைப்போம் ஆனால் சரியான இடத்தில் பேசும் சூழ்நிலை ஏற்பட்டால் தவறாக பேசுவோம். எப்படி பேசுவது என்றும் தெரியாது. எனவே கம்யூனிகேஷனை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும்.

4. Negotiation (பேச்சுவார்த்தை):

எல்லாவற்றிக்கும் சரி என்று சொல்லாமல் தேவையற்ற விஷயங்களை தவிர்த்து விட வேண்டும். எது சிறந்ததோ அவற்றை மட்டும் செய்ய வேண்டும்.

5. Persuasion (அறிவுறுத்தல்):

உங்களுக்கு எது பிடிக்குமோ, எது தேவையோ அவற்றை நேர்மையான வழியில் எப்படி அடைய வேண்டும் என்று கற்று கொள்ளுங்கள்.

6. Physical strength and stamina (உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மை):

நல்ல உணவுகளை சாப்பிட்டு உடலை வலிமையாக வைத்து கொள்ளவேண்டும். உடலில் எப்போதும் வலிமை இருக்க வேண்டும். ஏனென்றால் உடல் வலிமையாக இருந்தால் தான் நம்மால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்.

7. Flexibility (நெகிழ்வு தன்மை):

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்ப்பது நல்லது. கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் தொடர்ந்து கணினியை பார்த்து கொண்டே இருப்பார்கள் இதனால் உடலுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படும். இதனால் உடலை தளர்வாக வைத்து கொள்ளுங்கள் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்து கொள்ளுங்கள். இந்த திறன்களை வளர்த்து கொண்டாலே உங்களுக்கு என்ன தேவை என்பது புரிந்துவிடும். இதனால் நிறைய விஷயங்களை அடைய முடியும்.

வேலைக்கான நேரத்தில் மட்டும் வேலைகளை செய்ய வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் நிலைத்தன்மை முக்கியம். ஒரு வேலையை செய்யும் போது அதில் நிலையாக இருக்க வேண்டும். பாதியில் விட்டுவிட கூடாது. எல்லாவற்றையும் புதிதாக கற்றுக்கொண்டு அவற்றை மீண்டும் மீண்டும் செய்தால்தான் பழக்கம் உண்டாகும். ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து அதில் மாஸ்டர் ஆகுங்கள்.

உங்களை சுற்றி நேர்மறையான மனதர்களையே வைத்து கொள்வது நல்லது. எனவே அதிகம் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் உலகளாவிய திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். நிலையாக இருக்க வேண்டும். முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும் இவற்றை எல்லாம்தான் ஆர்தர் இந்த 3 வது பாகத்தில் தெளிவாக கூறியுள்ளார்.

Do It Today Book Conclusion (முடிவுரை):

எல்லா விஷயங்களையும் தள்ளிப்போடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும். நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் ஆர்தர் டேரியஸ் எழுதிய இந்த டூ இட் டுடே புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆர்தர் சொன்ன விஷயங்களை பின்பற்றி அவ்வப்போது செய்ய வேண்டிய வேலைகளை அவ்வப்போது செய்து விட்டு விரும்பியதை எளிதில் அடையுங்கள்.

Latest Slideshows

Leave a Reply