Double Treat for Surya's Birthday: சூர்யா பிறந்தநாளுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக அவரது படத்தில் டபுள் ட்ரீட் ( Double Treat for Surya’s Birthday) காத்துக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. முன்னணி நடிகரான சூர்யா தற்போது சிவாவின் இயக்கத்தில் உருவாகும் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கங்குவா படம் சூர்யாவுக்கும், சிவாவுக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. எனவே சிவா தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்தப் படம் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. சூர்யாவின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த படத்தில் இருந்து டீசர், போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பீரியட் காலத்திலும், நிகழ்காலத்திலும் நடக்கும் கதையை சிவா  அமைத்துள்ளார். இதனை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கங்குவா படத்தில் நடித்து முடித்த சூர்யா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிக்கவுள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சமீபத்தில், படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை க்ளிம்ப்ஸ் வீடியோவுடன் படக்குழு அறிவித்தது. அதில் சூர்யாவின் லுக்கை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயினர். இந்த படம் தரமான ஆக்ஷனுடன் இருக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சூர்யா பிறந்தநாளுக்கு டபுள் ட்ரீட் ( Double Treat for Surya's Birthday)

இந்நிலையில் கங்குவா மற்றும் சூர்யா 44 படங்களின் அப்டேட் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதேபோல் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியுடன் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யாவின் படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என்ற அறிவிப்பு சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக சூர்யாவின் படங்கள் வெளிவராமல் இருந்தாலும், அவரது ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்கின்றனர். கங்குவா மற்றும் சூர்யா 44 அவர்களின் பொறுமைக்கு ஏற்ற படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply