Double Tuckerr Movie Review : டபுள் டக்கர் திரைப்படத்தின் திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் மீரா மஹதியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள டபுள் டக்கர் என்ற அனிமேஷன் திரைப்படத்தின் (Double Tuckerr Movie Review) விமர்சனத்தை தற்போது காணலாம். ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை மனதில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில் டபுள் டக்கர் படம் வெளியாகியுள்ளது. ஆர்ட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மீரா மஹதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், காளி வெங்கட், முனீஸ்காந்த், மன்சூர் அலிகான், ஷா ராவ், சுனில் ரெட்டி, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யா சாகர் இசையமைத்துள்ளார்.

படத்தின் மையக்கருத்து :

ஒருவரது பிறப்பு முதல் இறப்பு வரை செய்த தவறுகளையும் நன்மைகளையும் எண்ணி லெஃப்ட் மற்றும் ரைட் என்ற இரண்டு பேர் கணக்கெடுத்து அதனை கடவுளிடம் சமர்பிக்கிறார்கள். அதே சமயம் அவன் இறக்கும் போது அவனை பூமியில் இருந்து கடவுளிடம் அழைத்துச் செல்பவர்களும் இவர்கள்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கதாநாயகன் தீரஜை லெஃப்ட் மற்றும் ரைட் தவறுதலாகக் கொலை செய்து விட, அதனால் ஏற்படும் பிரச்சனைகள், குழப்பங்கள் எப்படி தீர்ந்தன என்பதுதான் படத்தின் கதையாகும்.

Double Tuckerr Movie Review :

படம் ஆரம்பம் முதலே வேடிக்கையாக உள்ளது. குறிப்பாக லெஃப்ட் மற்றும் ரைட் கதாபாத்திரங்கள் சினிமா கதாபாத்திரங்களாக மாறி தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் காட்சிகளில் கைதட்டல் பெற்றது. சிம்பயாசிஸ் டெக்னாலஜிஸின் அனிமேஷன் இந்தக் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. திரைப்பட கதாபாத்திரங்களுக்கு அப்பால் நன்கு அறியப்பட்ட ஒரு பாத்திரம் அனிமேஷில் இடம்பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரம் திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. துள்ளலான கதைக்களத்திற்கு வித்யாசாகரின் இசை வலுவாகப் பொருந்துகிறது. காளி வெங்கட் மற்றும் முனிஷ்காந்த் ஆகியோர் தங்கள் குரல் மூலம் லெஃப்ட் மற்றும் ரைட் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தனர். இவர்களை கடந்து, சுனில் ரெட்டி, ஷா ராவ் ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் வரவேற்பை பெற்றது.

Double Tuckerr Movie Review : படத்தின் முதல் பாதியில் தீவிரமாக இருக்கும் நகைச்சுவை, இரண்டாம் பாதியில் ஆங்காங்கே நகைச்சுவையை தெளித்துள்ளனர். அனிமேஷன் கேரக்டரைத் தவிர, மற்றவர்களின் நகைச்சுவை கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகவில்லை. திரைக்கதையில் திருப்பங்கள் இருந்தாலும், கதைக்களத்தில் அந்தத் திருப்பங்கள் ரசிகர்களின் மனதில் பதியவில்லை. பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கும் அளவிற்கு சித்தரிக்கப்படவில்லை. நடிகர்களிடமிருந்து இன்னும் கொஞ்சம் வேலை இருந்திருக்கலாம். படத்தின் ஹீரோ தீரஜ் மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் மீரா மஹதியின் டபுள் டக்கர் குழந்தைகளை மகிழ்விக்கும்.

Latest Slideshows

Leave a Reply