Dr Krishna Sivukula Donated 228Cr To Chennai IIT : Dr Krishna Sivukula ரூ.228 கோடியை Chennai IIT-க்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்

Indo-MIM நிறுவனத்தின் Founder மற்றும் Chief Executive Officer-ருமான Dr.Krishna Sivukula தான் படித்த Chennai IIT கல்வி நிறுவனத்தை ஆதரிப்பதற்காக மற்றும் எதிர்கால மாணவ சந்ததியினர் அறிவாற்றலை பெற்று மிகுந்த பயனடைய Chennai IIT-க்கு ரூ.228 கோடியை நன்கொடையாக (Dr Krishna Sivukula Donated 228Cr To Chennai IIT) வழங்கி உள்ளார். முன்னாள் மாணவர் Dr.Krishna Sivukula Chennai IIT கல்வி நிறுவனத்தில் 1970 ஆம் ஆண்டில் M.Tech படித்துள்ளார். இதுவரை இந்தியாவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடை இதுவாகும்.

இந்த ரூ.228 கோடி நன்கொடையைக் கொண்டு,

  • Chennai IIT-யில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் கல்வி உதவித்தொகை.
  • Chennai IIT-யின் ஆராய்ச்சிக்கான சிறப்பு மானியத் திட்டம்.
  • Chennai IIT-யின் புதிய மாணவர்களுக்கான இளநிலை பட்ட கல்வி உதவித்தொகை திட்டம்.
  • Chennai IIT-யின் விளையாட்டு வீரர்களுக்கான பாடத்திட்டம்.
  • Chennai IIT-யின் சாஸ்த்ரா இதழை மேம்படுத்துதல்.
  • Chennai IIT-யின் கிருஷ்ணா பிளாக் பராமரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

Dr Krishna Sivukula Donated 228Cr To Chennai IIT - Chennai IIT கல்வி நிறுவன வளாகத்தில் 'கிருஷ்ணா சிவுகுலா பிளாக்' :

Chennai IIT கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், Dr.Krishna Sivukula-வை கவுரவிக்கும் விதமாக Chennai IIT கல்வி நிறுவனத்தின் பிளாக் ஒன்றுக்கு ‘கிருஷ்ணா சிவுகுலா பிளாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. Dr.Krishna Sivukula 1997-ல் இந்தியாவிற்கு ‘Metal Injection Moulding’ (MIM) எனப்படும் நவீன பொறியியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தார். அமெரிக்காவில் 1997-ல் வளர்ந்துவரும் தொழில்நுட்பமாக ‘Metal Injection Moulding’ (MIM) இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டில் Chennai IIT அவருக்கு ‘Best Old Student’ விருது வழங்கி அவரின் தொழில்முறை சிறப்பையும் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றும் பங்களிப்புகளையும் அங்கீகரித்து கவுரவித்தது.

Chennai IIT இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி உரை :

Chennai IIT இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “எங்களின் முன்னாள் மாணவர் Dr.Krishna Sivukula பல ஆண்டுகளுக்குப் பிறகும் தாம் படித்த கல்வி நிறுவனத்தை நினைவில் வைத்து செயலாற்றுவது, உலகத்தில் கல்வி மட்டுமே மனிதகுலத்திற்கு அளிக்கக் கூடிய ஒரே அழியாத செல்வம் என்பதை அனைவருக்கும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. Chennai IIT கல்வி நிறுவனத்தின் சிறந்த வளர்ச்சிக்கு உதவும் கிருஷ்ணா சிவுகுலாவின் மிகப்பெரிய பங்களிப்பிற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர், எதிர்கால சந்ததியினர் நல்ல அறிவாற்றலைப் பெற்று மிகுந்த பயனடைவார்கள் என்றார்”.

Dr.Krishna Sivukula உரை :

Dr.Krishna Sivukula தாம் படித்த கல்வி நிறுவனத்தைப் பற்றி போற்றி பேசுகையில், “எனது கல்வி Chennai IIT-யில் மிகவும் மறக்க முடியாததாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமாகவும் இருந்ததுடன் வாழ்க்கையில் பலவற்றைச் சாதிக்க எனக்கு உதவியது. எனது Chennai IIT கல்வி ஆனது அகில இந்திய அளவில் எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்ட தொகையைவிட மிகப்பெரிய நன்கொடையை நான் படித்த கல்வி நிறுவனத்திற்கு ஒரு பரிசாக நான் திருப்பி செலுத்தும் நிலையில் என்னை வைத்துள்ளது” என்றார்.

Latest Slideshows

Leave a Reply