Dr Ramadoss Biopic : படமாகிறது பாமக நிறுவனர் Dr ராமதாஸ் வாழ்க்கை வரலாறு

Dr Ramadoss Biopic :

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டாமை படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சேரன். அதன்பிறகு, கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சேரன் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு படத்திற்கு தேசிய விருதைப் பெற்றது. பின்னர், பாண்டவர் பூமி, சொல்ல நிறைந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தந்தார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக நடித்த படம் திருமணம். 2019ல் வெளியான படத்துக்குப் பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு படத்தைக்கூட இயக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஜர்னி என்ற வெப் சீரிஸை இயக்கினார் சேரன். அந்த வெப் சீரிஸ் பொங்கலுக்கு OTTயில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் சேரனின் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி பிரபல அரசியல்வாதியும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக (Dr Ramadoss Biopic) எடுக்க திட்டமிட்டுள்ளார் சேரன். மேலும் இப்படத்தில் ராமதாஸ் கேரக்டரில் நடிக்க நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை சேரன் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு (Dr Ramadoss Biopic) படமாக உள்ளது. தமிழக இட ஒதுக்கீடு போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயராக மருத்துவர் ராமதாஸ் பெயர் உள்ளது. ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, மருத்துவம் படித்து மருத்துவராகி, சாதாரண மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்து சமூகத்தில் நற்பெயர் பெற்றார். 1980 களில் அவரது பார்வை மருத்துவ சேவையை தாண்டி சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு சார்ந்து சென்றது. வன்னியர் சமுதாய நலனுக்காக வன்னியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, 1987ல் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தார். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து சாலைகளும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. இதில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.

1989ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ‘மிகப் பிற்படுத்தப்பட்டோர்’ என்ற சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, வன்னியர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு மருத்துவர் ராமதாஸின் பங்கு மிக முக்கியமானது. சமூகத்திற்க்காக போராடும் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் சேரன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதற்காக மருத்துவர் ராமதாஸ் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பணியில் இயக்குனர் சேரன் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் மருத்துவர் ராமதாஸ் வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சேரன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள ஜர்னி வெப்சீரிஸ் வெளியாகிய பலரது கவனத்தையும் பெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு (Dr Ramadoss Biopic) திரைப்படமாக உருவாகும் செய்தி பாமகவினர் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply