Dragon Box Office Collection : டிராகன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 21-ம் தேதி வெளியான படம் டிராகன். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், படத்தின் வசூல் (Dragon Box Office Collection) குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

டிராகன்

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள படம் டிராகன் ஆகும். அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ள ஓ மை கடவுளே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் வெற்றி அஸ்வத் மாரிமுத்துவுக்கு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் வாய்ப்பையும் கொடுத்தது. அதை முடித்துவிட்டு தற்போது டிராகன் படத்தை (Dragon Box Office Collection) இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். மொத்தம் 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரதீப்புடன் அனுபமா, கயாடு லோஹர், ஜார்ஜ் மரியன், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் மேனன், மிஷ்கின் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. டான் 2 தான் இந்த படம் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படம் கடந்த 21-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. லவ் டுடே படம் கொடுத்த வெற்றியை இந்த படத்தில் பிரதீப்பும், ஓ மை கடவுளே கொடுத்த வெற்றியை அஸ்வத்தும் தக்க வைப்பார்களா என்று பலரும் நினைத்தனர்.

படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் ஆதரவை அளித்துள்ளனர். இந்தப் படத்துக்குப் போட்டியாக வந்த தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இருக்கும் இடம் தெரியாமல் அடங்கிவிட்டது. முதல் நாள் முதல் காட்சி முடிந்ததிலிருந்தே டிராகன் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்கின்றன. குறிப்பாக, மாயாஜால் தியேட்டரில் பெரும்பாலான ஷோக்களில் டிராகன் (Dragon Box Office Collection) படத்தையே திரையிடுகிறார்கள். இதேபோல் இன்னும் பல தியேட்டர்களில் டிராகன் படத்தைக் திரையிட ஆரம்பித்துவிட்டார்கள். இதன் காரணமாக டிராகன் திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்று சொல்லப்படுகிறது.

டிராகன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் (Dragon Box Office Collection)

Dragon Box Office Collection - Platform Tamil

விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதன் பிறகு இரண்டாவது நாளில் 10.8 கோடி ரூபாய் வசூலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முதல் இரண்டு (Dragon Box Office Collection) நாட்களில் நல்ல வசூலை அள்ளியது. இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று, விடுமுறை என்பதால், படத்திற்கான கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று டிராகன் படம் தமிழகத்தில் மட்டும் 11 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஆக, தமிழில் மட்டும் இப்படம் 27 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. தெலுங்கில் இதுவரை மூன்று நாட்களில் 5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. ஆக மொத்தத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளையும் சேர்த்து டிராகன் படம் 32 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்திற்கான தியேட்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், படம் 100 கோடி ரூபாய் வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என திரையுலகினர் கூற ஆரம்பித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply