Dragon Movie Review : டிராகன் திரைப்படத்தின் திரை விமர்சனம்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் மேனன், விஜே சித்து மற்றும் அஸ்ரத்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டிராகன். இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த பலரும் இது டான் படத்தின் காப்பியா என கேள்வி எழுப்பினர். உண்மையிலேயே இது டான் படத்தின் காப்பியா? அல்லது இந்த டிராகன் படம் என்ன சொல்கிறது என்பதை (Dragon Movie Review) பார்க்கலாம். இளைஞர்களை கெடுக்கும் பிரதீப் ரங்கநாதன் என்று இளம்பெண் ஒருவர் கூறும் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், இயக்குநர் இளைஞர்களை கெடுக்கும் வகையில் படத்தை எடுத்தாரா அல்லது இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறாரா என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

டிராகன் படத்தின் கதைக்களம்

இன்ஜினியரிங் கல்லூரியில் 48 அரியர் வைத்துவிட்டு பிரின்ஸிபல் மிஷ்கினிடம் இந்த படிப்பே வேண்டாம் என ஐடி கார்டை தூக்கிப் போட்டு விட்டு செல்லும் ஹீரோ வேலைக்கு சென்று சம்பாதிப்பது போல வீட்டில் பெற்றோர்களை (Dragon Movie Review) ஏமாற்றிவிட்டு ஊதாரியாக நண்பர்கள் வீட்டில் பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை செய்கிறார். கல்லூரியில் படிக்கும் போது ரவுடியாக இருக்கும் பசங்களை பெண்களுக்கு பிடிக்கும் என்றும் அதே காரணத்திற்காக அனுபமா பரமேஸ்வரன் டிராகன் எனும் டி.ராகவனை காதலித்து வருகிறார். இருப்பினும் கல்லூரி வாழ்க்கையை முடித்த பிறகு, வேலை வெட்டி செய்யாத ஒருவனை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என புரிய வந்து அவனை பிரேக்கப் செய்து பிரிகிறார்.

அதன் பிறகு ஹீரோ திருந்துகிறாரா என்று பார்த்தால் அதுதான் இல்லை. போலியான டிகிரி சான்றிதழைப் பெற்று பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறார். கௌதம் மேனன் மேனேஜராக இருக்கும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பெரிய தொழிலதிபரான கே.எஸ்.ரவிக்குமாரின் மகளான கயாடு லோஹரை திருமணம் செய்ய நிச்சயம் ஆகிறது. ஆனால் அதன் பிறகு நடக்கும் ட்விஸ்ட் காரணமாக டிராகனின் வாழ்க்கை (Dragon Movie Review) ரிட்டர்ன் ஆஃப் தி காலேஜ் ஆக மாற இரண்டாம் பாதியும், கிளைமாக்ஸ் காட்சிகளும் இளைஞர்களுக்கு பாடமாக அமைவது தான் இந்த டிராகன் படத்தின் கதையாகும்.

டிராகன் திரை விமர்சனம் (Dragon Movie Review)

Dragon Movie Review - Platform Tamil

லவ் டுடே படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகராக பிரதீப் ரங்கநாதன் மிகவும் மேம்பட்டுள்ளார். முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை தனது நடிப்பால் மிரட்டுகிறார். நகைச்சுவை காட்சிகள்  ரசிகர்களை தியேட்டரில் சிரிக்க வைத்துக் கொண்டே (Dragon Movie Review) இருக்கிறது. ஹீரோ மட்டும் சிரிக்காமல் மற்றவர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும்படியான படமாக இந்த டிராகன் படம் உள்ளது. அனுபமா பரமேஸ்வரன் காதலியாகவும், வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள பிரதீப் ரங்கநாதனை பிரேக்கப் செய்யும் இடங்களிலும் நடிப்பால் கைதட்டல்களை பெறுகிறார். அவரது போர்ஷன் முதல் பாதியில் முடியாமல் இரண்டாம் பாதியில் எதிர்பாராத கம்பேக்காக அமைவது தான் படத்தின் பிளஸ். பிரேமம், டான் என அனைத்து படங்களையும் வச்சு செய்துள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

ஏமாற்றி வாழ்க்கையில் முன்னேற முடியாது. படித்தால்தான் முன்னேற முடியும். குறுக்கு வழி எப்போதும் சறுக்கி விட்டு விடும் என்பதை மிஷ்கினை வைத்து சொல்லப்பட்ட செய்தி இளைஞர்களுக்கு தேவையான பாடமாக அமைந்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் – மிஷ்கின் கெமிஸ்ட்ரி படத்திற்கு மிகப்பெரிய பலம். அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், கயாடு லோஹர், பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக நடித்துள்ள ஜார்ஜ் மரியம் என நடிகர்கள் (Dragon Movie Review) அனைவரையும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வீணடிக்காமல் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. பக்க பலமாக இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் பாடல்களும் பின்னணி இசையும் இளைஞர்களை ஆட வைக்கிறது. அஸ்வத் மாரிமுத்து ஒரு முழுமையான தொகுப்புப் படத்தைத் கொடுத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply