Dragon Spacecraft: சுனிதா வில்லியம்ஸை அழைக்க சென்றது டிராகன் விண்கலம்

அமெரிக்காவின் தனியார் நிறுவனமான போயிங் நிறுவனம் உருவாக்கிய ‘ஸ்டாா்லைனா் விண்கலத்தின்’ மூலம் கடந்த ஜூன் மாதம்  5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு International Space Station (ISS) சென்றனர். 

வெறும் 8 நாட்கள் மட்டுமே விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்யும் திட்டத்துடன் நாசா இவர்களை அனுப்பி வைத்தது. அதன்படி இவர்கள் ஜூன் 14-ம் தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டாா்லைனா் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் ஹீலியம் வாயு கசிவால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.   

100-நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிருக்கும் அவர்கள் இருவரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கு நாசா பல்வேறு முயற்சிகளை செய்தது. ஆனால் ஒரு பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாசா சுனிதா மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள் என அதிகாரப்பூர்வமாக நாசா அறிவித்தது.  

இதற்காக எலான் மஸ்க் நிறுவனத்தின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ உதவியை நாசா நாடியது. இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து டிராகன் விண்கலம் (Dragon Spacecraft) சர்வேதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டது. இந்த டிராகன் விண்கலத்தில் க்ரூ – 9 திட்டத்தின் படி 2 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விண்கலத்தில் சுனிதா மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதற்கு வசதியாக இரண்டு இருக்கைகள் காலியாக வைக்கப்பட்டுள்ளது.

Dragon Spacecraft பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புகிறது

நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் நிக் ஹாக்வே மற்றும் ரஷ்யா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்ஸாண்டர் கோர்பனோவ் ஆகியோருடன் டிராகன் விண்கலம் (Dragon Spacecraft) விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இவர்கள் விண்வெளியில் ஐந்து மாதம் ஆராய்ச்சி பணியை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் பூமிக்கு வரும்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் அழைத்து வர உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply