Dragon Vs Vidaamuyarchi : அஜித்தின் விடாமுயற்சி சாதனையை முறியடித்த பிரதீப் ரங்கநாதனின் டிராகன்

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வசூல் சாதனையை விட பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் (Dragon Vs Vidaamuyarchi) அதிக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

டிராகன்

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்து தன்னால் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே திரைப்படம் 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் (Dragon Vs Vidaamuyarchi) டிராகன். கல்லூரி வாழ்க்கை, காதல், ஆபீஸ், காதல் தோல்வி என இளைஞர்களை கவரும் அம்சங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘டிராகன்’ படத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் என்னதான் பில்டிங் ஸ்ட்ராங்கா இருந்தாலும் அதற்கான பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்காக இருந்தால்தான் ஒரு விஷயம் சிறப்பாக அமையும் என்ற செய்தியை அனைவருக்கும் புரியும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஹீரோ பல இடங்களில் தோல்வியடைந்தாலும், இந்தப் படத்தில் வரும் இந்த உண்மையான கருத்துதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். அதே போல் கௌதம் மேனன், மிஷ்கின், அஸ்வந்த் மாரிமுத்து உள்ளிட்ட 4 இயக்குநர்களும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். கடந்த 21 ஆம் தேதி திரைக்கு வந்த டிராகன் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் ரூ.35 கோடியில் தயாரித்திருந்தது. இளம் ரசிகர்களைக் கவர்ந்த டிராகன், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் வசூல் (Dragon Vs Vidaamuyarchi) குவிக்க தொடங்கிவிட்டது. டிராகன் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில் ரூ.60 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. நேற்று மட்டும் டிராகன் தமிழகத்தில் 4 கோடி வசூல் குவித்திருக்கிறது. இப்படி தொடர்ந்து 2 படங்களில் நடித்து ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் மீது அதீத நம்பிக்கையுடன் 3-வது படத்தையும் தயாரிப்பதாக ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அவரது படத்துக்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.

விடாமுயற்சி சாதனையை முறியடித்த டிராகன் (Dragon Vs Vidaamuyarchi)

Dragon Vs Vidaamuyarchi - Platform Tamil

இந்நிலையில்தான் டிராகன் விடாமுயற்சியின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. திங்கள் கிழமை காட்சியில் இந்த ஆண்டில் இதுவரை (Dragon Vs Vidaamuyarchi) அதிக வசூல் செய்த படமாக விடாமுயற்சி ரூ.2.75 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அந்த வசூலை டிராகன் திரைப்படம் முறியடித்துள்ளது. இந்த படம் முதல் திங்கட்கிழமை அன்று ரூ.3.81 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply