Driverless Metro Train : OCT 26-ல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம்

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் (Driverless Metro Train) சோதனை ஓட்டம் வரும்  OCT 26ம் தேதி நடத்தப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பானது பயணிகளிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்  தயாரித்து செயல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆனது  முடிவு செய்தது. இந்த மெட்ரோ ரயில்கள் (Driverless Metro Train) மாதவரம் பால் பண்ணையில் தொடங்கி சென்னை சிறுசேரி சிப்காட் வரையிலும் (45.4 கி.மீ), சென்னை கலங்கரை விளக்கத்தில் தொடங்கி சென்னை பூந்தமல்லி பணிமனை வரையிலும் (26.1 கி.மீ), சென்னை மாதவரத்தில் தொடங்கி சோழிங்கநல்லூர் வரையிலும் (44.6 கி.மீ) என 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆனது அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில்களை (Driverless Metro Train) தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆந்திர மாநிலம் சிட்டியில் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் அறிவிப்பு (Driverless Metro Train)

அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா முதல் ரயிலினை கடந்த செப்டம்பர் 22ஆம் நாள் தயாரித்து முடித்தது. இந்த ரயில் சோதனை ஓட்டத்திற்காக பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது 3 பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரயில் (Driverless Metro Train) சோதனை ஓட்டம் சென்னை பூந்தமல்லி முதல் சிறுசேரி சிப்காட் வரை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயிண்ட் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆய்வுகள் ஆய்வுகள்  நடத்தப்பட உள்ளன .   

மேலும் மெட்ரோ பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள 900 மீட்டர் Test Driving Track-ல் வைத்து அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டம் ஆனது தொடர்ந்து  பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழிதடத்திலும் நடைபெற உள்ளது.

Latest Slideshows

Leave a Reply