Driverless Metro: சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில் அறிமுகம்

CMRL தனது இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லா ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஆனது ஆகஸ்டு மாதத்தில் இருந்தது நடைபெறும். இந்த மெட்ரோ ரயில்களின் முதல் சேவை 2025 இல் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டிரைவர் இல்லாத தொழில்நுட்பம் (Driverless Metro)

டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்  “டிரைவர்லெஸ் டெக்னாலஜி” என்று அழைக்கப்படும் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாடு (CBTC) அமைப்பில் செயல்படும். 

டிரைவரில்லாத மெட்ரோ ரயில் என்றாலும்  பயணிகளுக்கு உறுதியளிக்க லோகோ பைலட்டுகளை மற்றும் ரோவிங் உதவியாளர்களை CMRL-ல் நியமிக்கும். மெட்ரோ சரியாக இயங்குகிறதா என்று கண்காணிக்கும் கண்காணிப்பாளர்கள் உதவியுடன்  இந்த  டிரைவர் இல்லாத மெட்ரோ இயங்கும்.

CMRL அதிகாரிகளின் அறிவிப்பின்படி, 138 மூன்று பெட்டிகள் கொண்ட  இந்த டிரைவரில்லாத மெட்ரோ ரயில்கள் மூன்று வழித்தடங்களுக்கு (118.9 கிமீ தூரத்திற்கு)  மூன்று ஒப்பந்தங்களில் வாங்கப்பட உள்ளன.

  • மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3)
  • லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4)
  • மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5)

காரிடர்களுக்கு இந்த ரயில்கள் வாங்கப்படும். இந்த மெட்ரோ ரயில்கள் ஆனது  ஆட்டோமெட்டிக் AI தொழில்நுட்பம், GPS, Signal reading, மற்றும் Timing Sequence ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இயங்கும்.  

சென்னை மெட்ரோ அதிகாரிகள் பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் டிரைவர் இல்லாத 26 ரயில்களின் முதல் பேட்ச் அடுத்த ஆண்டு மத்தியில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ அதேபோல இரண்டாம் கட்டத்திற்கு OMR மையமாக இருக்கும்.

மெட்ரோ செயல்பாடுகளின் சிறப்பம்சங்கள்

செயல்பாட்டின் பாதுகாப்பிற்காக புதிய பாதையில் தடங்களை கண்காணிக்க AI ஐப் பயன்படுத்தப்படும். பாதையில் விரிசல், தேய்மானம்  மற்றும் பிற முறைகேடுகள் போன்ற முரண்பாடுகளை AI அல்காரிதம்கள், கண்டறியும். செயல்பாடுகளை மேம்படுத்த சென்சார்கள், கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் சாதனங்களிலிருந்து நிகழ்நேர டிராஃபிக் தரவை பகுப்பாய்வு செய்ய AI அல்காரிதம்களைப் பயன்படுத்தலாம்

AI அமைப்புகள் ரயில் அமைப்புகளில் உள்ள முரண்பாடுகளை சரிபார்த்து  விபத்துகளை தடுக்கவும், மற்றும் ரயில் பாதுகாப்பை அதிகரிக்கவும் முடியும். செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தால் (OCC) ரயிலின் செயல்பாடுகளான, கதவைத் திறப்பது மற்றும் மூடுவது , நிறுத்தம் மற்றும் இயக்கம் போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த மெட்ரோவில் சார்ஜ் செய்ய வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளன.

Latest Slideshows

Leave a Reply