ஈரானின் Drone And Missile Attack தொடர்ந்து இஸ்ரேலில் நிலவும் பதற்றம்

Drone And Missile Attack :

ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை கொண்டு (Drone And Missile Attack) இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் தொடங்கியுள்ளது. ஈரானின் இரண்டு ராணுவ தளபதிகள் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது கடந்த ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் ராணுவத்தின் ரேடார், ஜி.பி.எஸ் உள்ளிட்டவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பல நகரங்களில் இந்த தீடீர் தாக்குதல் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. ஈரான் ட்ரோன்கள் மற்றும் அதிக சேதத்தை விளைவிக்கக்கூடிய ஏவுகணைகளையும் (Drone And Missile Attack) ஏவியிருப்பதாக கூறியுள்ளது. இஸ்ரேலுக்கு தேவையான உதவிகள் செய்ய அந்த பகுதியில் அதிக படைப்பிரிவுகளை அமெரிக்கா நிலைகொள்ளச் செய்துள்ளது. எந்த தாக்குதலையும் சமாளிக்கும் ஆற்றல் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் :

சிரியா, லெபனான் எல்லையில் அமைந்துள்ள கோலன் ஹெய்ட்ஸ் மற்றும் தெற்கு பகுதியில் உள்ள நெவடிம்ம் டிமோனா மற்றும் செங்கடல் பகுதியிலமைந்துள்ள எய்லாட் ஆகிய பகுதிகளில் வசிபவர்கள் பாதுகாப்பான இடங்களிலேயே செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இஸ்ரேல் தனது வான்பரப்பு முழுவதையும் மூடி அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  அமெரிக்காவில் தனது கடற்கரை இல்லத்திற்கு மேற்கொண்டிருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக வெள்ளை மாளிகை திரும்பி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஈரான் இஸ்ரேல் மீது வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா ராணுவம் ஈரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகிறது. மேலும், சிரியாவிலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, இஸ்ரேல் – காசாவிற்கு இடையே போர் நிலவியபோது இஸ்ரேயலுக்கு தேவையான போர் உதவிகள், ஆலோசனைகள் போன்றவற்றை அமெரிக்கா தொடர்ந்து வழங்கியது. இதேபோல தான், தற்போது ஈரான் நடத்திய தாக்குதலிலும் அமெரிக்கா எல்லவித உதவிகளையும் இஸ்ரேயலுக்கு வழங்குவது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன்காரணமாக, இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரோன்களை தடுத்து நிறுத்தும் பணியில் அமெரிக்கா ராணுவம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக 50-க்கும் மேற்பட்ட ஈரானிய ட்ரோன்கள் இஸ்ரேயலை நோக்கி ஏவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply