Drones To Monitor Pakistan : பாகிஸ்தானை கண்காணிக்க பதிண்டா தளத்தில் ஆளில்லா விமானங்கள்

பாகிஸ்தானை கண்காணிக்க இந்தியாவின் ஆளில்லா விமானங்கள் (Drones To Monitor Pakistan) ரெடி :

பதிண்டா தளத்தில் இந்திய ராணுவம் ஆளில்லா விமானங்களை நிலைநிறுத்தவிருக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா ஆனது இருந்து வருகின்ற போதிலும் அண்டை நாடுகள் நம் நாட்டின் நிலையை சோதிக்கின்றன. இந்தியாவின் எல்லைக்குள் பாகிஸ்தான் அவ்வப்போது அத்துமீறி நுழைந்து வருகின்றது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் இந்த அத்து மீறிய செயல்கள் நம் நாட்டின் பாதுகாப்பு நிலையை சோதிக்கும் வகையில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா ஆனது பாகிஸ்தான் நாட்டை கண்காணிக்கும் வகையில் ஆளில்லா விமானத்தை (Drones To Monitor Pakistan) உடமையாக்கி இருக்கிறது. இந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்திய கடற்படை ஆனது பாகிஸ்தானை கண்காணிக்கும் ஆளில்லா விமானத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஹெர்ம்ஸ் விமானத்தை பெறுவது மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஹெர்ம்ஸ்-900 ஸ்டார்லைனர் ஆளில்லா விமானம் :

  • இந்திய ராணுவம் ஆனது பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்புத் திறனைக் கணிசமாக உயர்த்தும் வகையில் முதல் ஹெர்ம்ஸ்-900 ஸ்டார்லைனர் ஆளில்லா விமானத்தை (Drones To Monitor Pakistan) ஜூன் 18-ம் தேதி பெற உள்ளது.
  • AdDefence Systems என்ற நிறுவனம் த்ரிஷ்டி-10 ட்ரோன் எனப்படும் ஹெர்ம்ஸ்-900 இந்தியாவுக்கு வழங்குகிறது.
  • இந்த த்ரிஷ்டி-10 ட்ரோன் எனப்படும் ஹெர்ம்ஸ்-900 ஆனது இந்திய ராணுவம் பெரும் முதல் ஆளில்லா விமானமாகும்.
  • இந்த த்ரிஷ்டி-10 ட்ரோன் எனப்படும் ஹெர்ம்ஸ்-900 விமானம் இந்திய நாட்டின் முப்படைகளுக்கும் கிடைக்க இருக்கிறது.
  • அதன் முதல்முறையிலேயே இந்திய இராணுவம் இரண்டு ஆளில்லா விமானங்களை பெறவிருக்கிறது.
  • இந்திய இராணுவம் வருகின்ற ஜூன் 18 அன்று ஹைதராபாத் படையிடம் இந்த இரு ஆளில்லா விமானங்களையும் ஒப்படைக்கப்பட உள்ளது.
  • பாதுகாப்பு அமைச்சகத்தால் அவசரகால அதிகாரத்தின் கீழ் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக படைகளுக்கு வழங்கப்பட இந்த பொருட்கள் ராணுவத்திடம் வருகிறது.
  • பாதுகாப்பு அமைச்சகத்தால் அவசரகால அதிகாரத்தின் கீழ் இந்திய ராணுவம் அதன் பதிண்டா தளத்தில் இந்த ஆளில்லா விமானங்களை (Drones To Monitor Pakistan) நிலைநிறுத்தவிருக்கிறது.
  • பாகிஸ்தான் நாட்டின் மேற்கு எல்லை முழுவதையும் இந்த பதிண்டா தளத்தில் நிறுத்தப்படும் ஹெர்ம்ஸ் ஆளில்லா விமானங்களானது கண்காணிக்கும்.
  • ஹெர்ம்ஸ் 900 ஸ்டார்லைன் ட்ரோன்கள் 30 மணி நேரத்திற்கும் மேலாக 2,000 கிமீ தூரம் பறக்கும் மற்றும் பயணிக்கும் திறனுடன் உருவாக்கபட்டு இருக்கிறது.
  • இந்த ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ரேடார் மூலம் கண்டறிய முடியாத குறைந்த அளவிலான வான் அச்சுறுத்தல்களை விரைவாகக் கண்டறியும். இதனால், இந்த ஹெர்ம்ஸ் விமானங்கள் சிறியது முதல் மிகவும் பெரிதான ஆபத்தையும் அறிந்து கொள்ளும்.
  • இந்த ஆளில்லா விமானத்தை இந்திய கடற்படை இந்த ஆண்டு ஜனவரியில் பெற்றது. அடுத்ததாக இந்திய ராணுவம் ஹெர்ம்ஸ் விமானத்தை பெறுவது குறிப்பிடத்தக்கது.
  • மூன்றாவது ஹெர்ம்ஸ் விமானம் மீண்டும் கடற்படைக்கும், நான்காவது ஹெர்ம்ஸ் விமானம் ராணுவப்படைக்கும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply