Droupadi Murmu Presents Padma Awards : நடிகர் அஜித் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
தமிழகத்தின் முன்னணி நடிகர் அஜித் குமார், ரவிச்சந்திர அஸ்வின் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை (Droupadi Murmu Presents Padma Awards) வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு, கல்வி, சமூக சேவை, சுகாதாரம், இலக்கியம், அறிவியல், தொழில், வர்த்தகம், குடிமைப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் (Droupadi Murmu Presents Padma Awards)
பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இதில் பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும் என மொத்தம் 139 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழாவானது டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் (Droupadi Murmu Presents Padma Awards) நடைபெற்றது. இதில் முதல்கட்டமாக 71 பேருக்கு மட்டும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். மீதம் உள்ள 68 பேருக்கு ஓரிரு நாட்களில் பத்ம விருது வழங்கப்படும் என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.


நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித் குமாருக்கு குடியரசுத் தலைவர் ‘பத்ம பூஷண்’ விருது வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் அஜித் குமார் (Droupadi Murmu Presents Padma Awards) மனைவி ஷாலினி கலந்து கொண்டார். மேலும் பிஹார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி (மறைவு), தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, டாக்டர் ஏ.ஏ.சூர்ய பிரகாஷ், பங்கஜ் ஆர்.படேல், வினோத் குமார் தாம், திரைப்பட இயக்குநர் சேகர் கபூர், டாக்டர் ஜோஸ் சாக்கோ பெரியப்புரம், ஸ்ரீஜேஷ், பங்கஜ் கேஷுபாய் உதாஸ் (மறைவு) ஆகிய 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ‘பத்மஸ்ரீ ‘ விருது வழங்கி கவுரவித்தார். மேலும் முனைவர் லட்சுமிபதி ராமசுப்பையர், கே.தாமோதரன் (செப்), ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, கணேஷ்வர் சாஸ்திரி, பேராசிரியர் நிதின் நோரியா, ஸ்டீபன் நாப், ஷீன் காப் நிஜாம், டாக்டர் பிஹாரி அகர்வால், பாடகர் அரிஜித் சிங் உள்ளிட்ட 57 பேருக்கு குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
Latest Slideshows
-
Access Land Details In Without Documents : இனி எந்த ஆவணம் இல்லாமல் நிலத்தின் விவரம் அறிய புதிய திட்டம் அறிமுகம்
-
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
-
Ku.Azhagirisaami Kadhaigal : கு.அழகிரிசாமி கதைகள்
-
Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
-
Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்
-
Butterfly Life Cycle : பட்டாம்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவல்கள்
-
Realme GT 7T Smartphone Launch On May 27 : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7T ஸ்மார்ட்போனை வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்கிறது
-
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு