DTCP Approved : DTCP என்றால் என்ன? DTCP முழுவிளக்கம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்
DTCP Approved : இந்தியாவிலுள்ள நிலைச்சொத்து (ரியல் எஸ்டேட்) மேம்பாட்டாளர்களுக்கு மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள அரசுத்துறையான Directorate Of Town And Country Planning (DTCP) ஒப்புதல் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் கட்டிடக் கட்டுமானங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பவர்கள் அந்தத் திட்டத்திற்கான அனுமதியை ஊரக உள்ளாட்சி அமைப்புக்களிடமிருந்து பெறவேண்டும். நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) அம்மாதிரியான அமைப்புக்களில் ஒன்றாகும். கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள அதன் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாகும்.
1. DTCP Approved என்றால் என்ன?
ஒரு மாநிலத்தில் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் DTCP ஆகும். நகர் ஊரமைப்பு இயக்கம் (DTCP) திட்டமிட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை நோக்கிய கொள்கைகளை உருவாக்குகிறது. டிடிசிபி (DTCP) வணிகம், குடியிருப்பு நிலைச்சொத்து கட்டுமானம் மற்றும் நகர திட்டமிடல் தொடர்பான பல்வேறுவிதமான இதர துறைகள் மற்றும் திட்டப்பிரிவுகளுக்கும் ஆலோசனை வழங்கிவருகிறது. ஒப்பீட்டளவில் ஒரு மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள விரும்பும் இந்தியாவில் இருக்கும் நிலைச்சொத்து மேம்பாட்டாளர்களும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் டிடிசிபி (DTCP) யின் ஒப்புதலை கண்டிப்பாக பெறவேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் அதற்கென தனிப்பட்ட டிடிசிபி (DTCP) துறையைக் கொண்டுள்ளது.
உதாரணமாக தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் திட்ட அமைவுவரைபடம் 2.47 ஏக்கர் நிலப் பரப்பளவுகளுக்கு மேலாக இருக்கும் பட்சத்தில் நிலைச்சொத்து மேம்பாட்டாளர்கள் டிடிசிபி Directorate Of Town And Country Planning யின் ஒப்புதலை (DTCP Approved) பெறவேண்டும். சிறிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு உள்ளூர் வளர்ச்சித்திட்ட அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளூர் வளர்ச்சித்திட்ட அமைப்புகள், அதிக உயரம் இல்லாத பிரிவுகளின் கீழ் 26,910 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு, வணிக மற்றும் நிறுவன கட்டிடங்களுக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம். அந்த வரம்பிற்கு அப்பால் உள்ள திட்டங்களுக்கு ஒரு கட்டுமான நிறுவனம் DTCP இன் அனுமதியைப் கண்டிப்பாக பெற வேண்டும்.
2. DTCP Approved அனுமதி பெற எப்படி விண்ணப்பிப்பது?
இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்கள் கட்டிடத் திட்ட அனுமதிக்கான செயல்முறையை ஆன்லைனில் கொண்டு வந்துவிட்டதால் கட்டுமான நிறுவனங்கள் அவர்களின் தொடர்புடைய அந்தந்த இணையதள பக்கங்களில் அவர்களது திட்டங்களுக்கான DTCP அனுமதி வேண்டி விண்ணப்பபித்துக் கொள்ளலாம். இருப்பினும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது அவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான அனைத்து அசல் தாள்களையும் தயாராக கையில் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை அனுப்பும்போது ஆன்லைனில் அனைத்து ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட DTCP ஆல் வகுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அனைத்து ஆவணங்களின் மென்படிவ நகல்களும் அவர்களிடம் இருக்க வேண்டும்.
3. சில மாநில DTCP-களின் இணையதள முகவரிகள்
- ஆந்திரப்பிரதேசம் – dtcp.ap.gov.in/dtcpweb/DtcpHome.html
- ஹரியானா – tcpharyana.gov.in/
- கர்நாடகா – www.dtcp.gov.in/kn
- மத்தியப்பிரதேசம் – www.emptownplan.gov.in
- தமிழ்நாடு – https://www.tn.gov.in/tcp/
- ராஜஸ்தான் – https://urban.rajasthan.gov.in/
4. DTCP அனுமதிபெற யார் விண்ணப்பிக்கலாம்?
ஒரு நில அமைப்பில் உள்ள வீட்டு மனையின் உரிமையாளர், மற்றும் குடியிருப்பு உரிமையாளர்களின் சங்கம், ஹவுசிங் சொசைட்டிகள் மற்றும் கட்டுமான தொழில் மேம்பாட்டாளர்கள் ஆகியோர் டிடிசிபி Directorate Of Town And Country Planning அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
5. நாம் வாங்கும் வீட்டு மனை DTCP ஆல்அங்கீகரிக்கப்பட்டதா என்பதை நான் எப்படி சரிபார்ப்பது?
ஓவ்வொரு மாநில DTCP இன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தின் இணைய முகப்பில் அதன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வீட்டு மனைகளின் பட்டியலையும் கொண்டுள்ளது. DTCP ஒப்புதல் பற்றிய தகவலைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும். இல்லையென்றால், DTCP அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
6. DTCP அனுமதி பெற எவ்வளவு கால அவகாசம் ஆகும்?
எளிதான வணிகம் செய்வதற்கான குறியீட்டின் (ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்) உலகளாவிய அளவில் உயரிய இடத்தைப் பிடிப்பதற்கான மத்திய அரசின் திட்டத்திற்கு இணங்க கட்டிட கட்டுமானத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான நேரத்தைக் குறைக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், டிடிசிபியிடமிருந்து அனுமதி (DTCP Approved) பெற குறைந்தது ஆறு மாதங்கள் வரை ஆகலாம்.
7. DTCP அனுமதி பெற மொத்தம் எவ்வளவு செலவாகும்?
Directorate Of Town And Country Planning அனுமதிக் கட்டணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் முற்றிலும் மாறுபடும். தமிழ்நாட்டில் DTCP கட்டணம் ரூ.500 முதல் ரூ.1,000 வரை இருக்கும். ஒப்புதலுக்கான கட்டணம் அது அமைந்துள்ள (கிராமப்புறம்/நகர்ப்புறம்) இடத்தின் அடிப்படையில் இருக்கும்.
8. DTCP ஒப்புதல் பெறுவதற்கான தேவைப்படும் ஆவணங்கள்
- மாநில Directorate Of Town And Country Planning திட்ட ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும் ஒரு கட்டுமானவியலாளருக்கு பல்வேறு ஆவணங்கள் தேவைப்படலாம். அத்தகைய ஆவணங்களின் முழுமையான பட்டியலை கீழே தொகுத்துத் தந்துள்ளோம். இருப்பினும், திட்டத்தின் தன்மையைப் பொறுத்து (குடியிருப்பு, வணிக அல்லது நிறுவனம்) ஆவணங்களின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
- சாலைகளின் அகலம் மற்றும் அமைப்பு கட்டிட உள்ளடங்கு வரம்பு மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஆக்கியற்றை காட்டும் மன அமைப்புத் திட்டப்படம்.
- முன்மொழியப்பட்ட திட்டப்பகுதியை முறையாகக் காட்டும் சர்வே வரைபடநகல்/கிராமத் திட்ட நகல்/நில அளவீட்டின் நகல்/சர்வே எண் புத்தகம்.
- முன்மொழியப்பட்ட மனையைக் காட்டும் முழுமையான திட்டபகுதி/ நில பயன்பாட்டை குறிப்பிடும் திட்டம் நகல்.
- முன்மொழியப்பட்ட மனையிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் குடியிருப்பு காலனிகள்/கல்வி/மருத்துவ/மத நிறுவனங்கள் போன்ற தற்போது அமைந்துள்ள அம்சங்களைக் காட்டும் விரிவான திட்டம்.
- அணுகல் சாலைகளின் அகலம் மற்றும் தன்மை/அமைப்பைக் காட்டும் உள்ளூர் அதிகாரஅமைப்பின் (ஆணையர்/ஊராட்சி செயலாளர்) சான்றிதழ்.
- முன்மொழியப்பட்ட கட்டிடம் எந்த நீர்நிலைகளுக்கும் அருகில் இல்லை என்று உறுதிப்படுத்தும் தகுதிவாய்ந்த அதிகாரியினால் வழங்கப்பட்ட சான்றிதழ்.
- அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியினால் உறுதிச்சான்று அளிக்கப்பட்ட அந்த மனையின் உடைமை உரிமையைக் காட்டும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், சர்வே எண், அளவு மற்றும் எல்லைகளின் அட்டவணை ஆகியவற்றைக் காட்டும் சான்றிதழ்.
- ஆய்வு மற்றும் நுண்ணாய்வு மேற்கொள்ள DTCP க்கு கட்டணம் செலுத்திய விவரங்கள்
- முன்மொழியப்பட்ட நிறுவல் கொள்திறன் (தொழில்துறை பயன்பாடுகளுக்கு).
- ஆலை மற்றும் இயந்திரங்களின் மொத்த திட்ட செலவு (தொழில்துறை பயன்பாடுகளுக்கு) வருவாய் அதிகாரியால் வழங்கப்பட்ட நில மாற்ற சான்றிதழ்.
- தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையிடமிருந்து பெற்ற தடையில்லா சான்றிதழ் (NOC).
- மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பெற்ற தடையில்லா சான்றிதழ் (NOC) (பொருந்தும் இடங்களில்).
- நீர்ப்பாசனத் துறையின் தடையில்லா சான்றிதழ் (NOC) (பொருந்தும் இடங்களில்).
- வருவாய்த் துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) (பொருந்தும் இடங்களில்)
- வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் இல்லாததை உறுதிப்படுத்த வனத்துறையின் தடையில்லா சான்றிதழ் (NOC).
Latest Slideshows
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்
-
India First Archaeological Documentary Film : இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் பொருநை வெளியீடு
-
Patel Brothers Have Built A Business In USA : அமெரிக்காவில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பட்டேல் பிரதர்ஸ்
-
Chat GPT Push Back Instagram And TikTok : இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் சாதனங்களை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி
-
MI Won The Match Against Delhi : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி
-
TN Medical College : தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதாக அறிவிப்பு
-
Ambedkar Jayanti 2025 : அம்பேத்கர் ஜெயந்தி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
-
TN Sub-Inspector Recruitment 2025 : தமிழக காவல்துறையில் 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Box Office : குட் பேட் அக்லி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்