Duleep Trophy 2023 : பரபரப்பான பைனல்...மேற்கு மண்டல அணிகள், தெற்கு மண்டல அணிகள் இடையே பலப்பரீட்சை...

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு மற்றும் தென் மண்டல அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

Duleep Trophy 2023 அரையிறுதி போட்டி :

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு-மத்திய மண்டல அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் பெங்களூரு புறநகர் பகுதியான ஆலூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் மேற்கு மண்டலம் 220 ரன்களும், மத்திய மண்டலம் 128 ரன்களும் எடுத்தன. அடுத்து 92 ரன்கள் முன்னிலையுடன் கடைசி இன்னிங்சை ஆரம்பித்த மேற்கு மண்டல அணி 292 ரன்கள் எடுத்தது.

நேற்று 4வது மற்றும் கடைசி நாள் ஆட்டம். தொடர்ந்து விளையாடிய மேற்கு மண்டல அணி மேலும் 5 ரன்கள் சேர்த்து 297 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆகையால் மத்திய மண்டல அணிக்கு 390 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. இந்த கடினமான இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை விளையாடிய மத்திய மண்டல அணி 35 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியாமல் போனது.

இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. ரிங்கு சிங்கின் அதிகபட்ச ஸ்கோர் 40 ரன்கள் (30 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்). அமந்தீப் கரே 27 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டி சமநிலையில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலையின் அடிப்படையில் மேற்கு மண்டல அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு அரையிறுதியில் முதல் இன்னிங்சில் முறையே வடக்கு மண்டலம் 198 ரன்களும், தெற்கு மண்டலம் 195 ரன்களும் எடுத்தன. 3 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய வடக்கு மண்டலம், 211 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தென் மண்டலத்துக்கு 215 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி, 3வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 5 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடைசி நாளான நேற்று, தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சாய் சுதர்சன் 17 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த ரவிக்குமார் சமர்த் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். நிதானமாக விளையாடிய மயங்க் அகர்வால் 54 ரன்களில் ஜெயந்த் யாதவின் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ. அடுத்து ஆனார், கேப்டன் ஹனுமா விஹாரி 43 ரன்களும், ரிக்கி புய் 34 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களும் எடுத்தனர்.

தெற்கு மண்டலம் வெற்றி :

தெற்கு மண்டலம் 8 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. சாய் கிஷோர் 15 ரன்களும், விஜய்குமார் வைஷாக் ரன் ஏதும் எடுக்கவில்லை. வட மண்டல தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், பால்தேஜ் சிங், வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வரும் 12ம் தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் மேற்கு-தெற்கு மண்டல அணிகள் மோதுகின்றன.

Latest Slideshows

Leave a Reply