Dussehra Festival 2024 : தசரா வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்

தசரா பண்டிகை இந்து சமூகத்தினரால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை நவராத்திரியின் இறுதியில் கொண்டாடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறும். அந்த வகையில் இந்த வருடம் 2024, இந்து நாட்காட்டி மாதமான கார்த்திகையின் கீழ் இந்த மாதம் அக்டோபர் 12 ஆம் தேதி (Dussehra Festival 2024) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இவற்றின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தசரா பண்டிகையின் வரலாறு :

இந்த தசரா பண்டிகைக்குப் பின்னால் சில புராணங்கள் உள்ளன. தசரா இந்தியாவின் சில பகுதிகளில் துர்கா தேவி மகிஷாசுரனை கொன்ற நாளைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் நவராத்திரியில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களும் வழிபடுகின்றனர். தர்மத்தை கடைபிடித்த துர்கா தேவி ஸ்தூல உலகை விட்டு வெளியேறியதைக் குறிக்கும் துர்கா தேவி தண்ணீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. தென் இந்தியாவில் தசரா விழாவானது முக்கியமாக, கர்நாடகாவின் மைசூரில், அன்னை துர்கா தேவியின் மற்றொரு அவதாரமான சாமுண்டீஸ்வரி அவதாரத்தில் மகிஷாசுர அசுரனை கொன்ற தினத்தை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

இந்த தினத்தில் நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். யானைகள் தேவி சாமுண்டீஸ்வரியை சுமந்து நகரம் முழுவதும் வீதி உலா வருவர். இதே விழாவை வட இந்தியாவில், இலங்கையில் ராவணனை கொன்ற நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்து புராணத்தில் இராமனின் மனைவியான சீதையை இராவணன் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. ராவணனும் பிரம்மாவிடம் இருந்து அழியாத வரத்தை பெற்றான். ஆனால் ராமர் விஷ்ணுவின் ஏழாவது அவதாரத்தில் போரில் காணப்பட்டார். அப்போது ராமர் அம்பு எய்து ராவணனை கொன்றார். இதனால் தசரா பண்டிகை தீமையை வென்ற நன்மையாக கொண்டாடப்படுகிறது.

தசராவின் முக்கியத்துவம் :

தசரா பண்டிகை என்பது தீமையை வென்ற நன்மையின் பண்டிகை ஆகும். குறிப்பாக இந்த பண்டிகை, மற்ற தினத்தில் நடக்கும் தவறுகள் கண்டிப்பாக எல்லாருக்கும் முன்னாள் வந்து சேரும் என்பதை எடுத்துரைக்கிறது. தசரா பண்டிகையானது (Dussehra Festival 2024) நேர்மையும், உண்மையும் எப்போது ஜெயிக்கும் என்பதை எடுத்து கூறுகிறது. இந்த தினத்தில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஏற்ற நாளாகக் கருதப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவில் இந்த தினத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

Dussehra Festival 2024 - தசராவின் கொண்டாட்டங்கள் :

இந்த தசரா தினத்தில் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ராவணன், கும்பகர்ணன் மற்றும் ராவணனின் மகன் மேகனாதன் ஆகியோரின் பெரிய மற்றும் உருவ பொம்மைகளை செய்து தீ வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் இந்த தினத்தில் ராம் லீலா என அழைக்கப்படும் ராமரின் வாழ்க்கை வரலாற்று நாடகங்கள் ஏற்பாடு செய்து மகிழ்வர். துர்கா தேவியின் சிலைகளை நீர்நிலைகளில் மூழ்கடிக்கப்படுறது.

Latest Slideshows

Leave a Reply