Earthquake : செங்கல்பட்டு உள்ளிட்ட 3 இடங்களில் லேசான நில அதிர்வு

செங்கல்பட்டு, ஆம்பூர் மற்றும் கர்நாடக மாநிலம் விஜயாபுராவில் Earthquake ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு Earthquake ஏற்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், ஆந்திரா அருகே கரையை கடந்தது, தமிழகத்தின் வடமாவட்டங்களில் தாக்குதலை தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் செங்கல்பட்டும் ஒன்று. அங்கு இயல்பு நிலை முழுமையாக திரும்பாத நிலையில், சில தாலுகாக்களில் மட்டும் வெள்ள நீர் வடியாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Earthquake ஏற்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Earthquake :

செங்கல்பட்டு, ஆம்பூர், விஜயாபுரா ஆகிய இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பெங்களூரு அருகே விஜயாபுரத்திலும், செங்கல்பட்டைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. செங்கல்பட்டில் 3.2 ரிக்டர் அளவிலும், கர்நாடக மாநிலம் விஜயாபுராவில் 3.1 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுராவில் காலை 6.52 மணிக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7.39 மணிக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நேபாளம், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் Earthquake ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கர்நாடகா மற்றும் தென் மாவட்டங்களில் Earthquake உணரப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply