சென்னை சென்ட்ரலுக்கு 'Eat Right Station' என்ற சான்றிதழை FSSAI வழங்கியுள்ளது

150 ஆண்டுகள் பழமையான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முக்கியமான அங்கீகாரம் கிடைத்துள்ளது :

தன்னுடைய 384-வது பிறந்தநாளை கொண்டாடி வாழ்ந்து வரும் சென்னையில் 150 வருடங்கள் பழமையான சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. தமிழகத்தில் மிகவும் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இருக்கிறது. இந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆனது 150 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்திய நாட்டின் டெல்லி, கொல்கத்தா உட்பட பல முக்கிய நகரங்களுக்கும் தலைநகர் சென்னையில் இருந்து நேரடி ரயில் சேவை ஆனது உள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆனது எப்போதும் கூட்ட நெரிசலுடன் பரபரப்பாக இருக்கும். தினசரி 200க்கும் மேற்பட்ட ரயில்களை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆனது கையாண்டு வருகிறது.

சராசரியாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் பயணம் மேற்கொள்கின்றனர். சென்னையில் எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்தும் ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் குறையவே குறையாது. தமிழகத்தில் காலை, மாலை, இரவு என எப்போதும் பரபரப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இருக்கும் மற்றும் எப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றாலும் அங்கே ஆள் நடமாட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். இங்கு ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம் உள்ளிட்ட பல தகவல்களை அறிவிக்க பொது அறிவிப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பல இடங்களிலும் LED தகவல் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்வை சவாலுடையோர் பயன்படுத்தும் விதமாக QR Code வசதியும் செய்யப்பட்டுள்ளது.

FSSAI சென்னை சென்ட்ரலுக்கு Eat Right Station என்ற சான்றிதழை வழங்கியுள்ளது

FSSAI (Food Safety And Standards Authority Of India)  எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஆனது 2008 ஆம் ஆண்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது, உணவுப் பொருட்களுக்கான அறிவியல் அடிப்படையிலான தரங்களை வகுத்து, அவற்றின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் ஒழுங்குபடுத்துவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் ஆகும். ரயில் நிலையங்களில் இருக்கும் கேட்டரிங் யூனிட்கள், உணவு விடுதிகள், கியோஸ்க்குகள், சில்லறை விற்பனை நிலையங்கள் என அனைத்து உணவு விற்பனையாளர்களும் பாதுகாப்பான முறையில் உணவைத் தயார் செய்து பயணிகள், அதிகாரிகளுக்கு வழங்குகின்றனவா என்பதை இந்த FSSAI ஆனது உறுதி செய்யும்.

இந்த சான்றிதழைப் பெற விரும்பும் விற்பனையாளர்கள், இந்திய உணவுப் பாதுகாப்புத் தர ஆணையத்தின் மூலம் பயிற்சி பெற வேண்டும். அதைத் தொடர்ந்து தணிக்கையும் நடத்தப்படும். அந்த தனிக்கையில் பெறும் மார்க் அடிப்படையில் சான்றிதழ் ஆனது வழங்கப்படும். சென்னை சென்ட்ரல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர், கும்பகோணம் என தென்னக ரயில்வேயில் மொத்தம் ஆறு ரயில் நிலையங்களுக்கும் மற்றும் திருச்சி மண்டல பயிற்சி நிலையத்திற்கும் Eat Right Station என்ற சான்றிதழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் வரை இந்த சான்றிதழ்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. FSSAI தெற்கு மண்டல இயக்குநர் வி.கே.பஞ்சம் இந்த சான்றிதழ்களை வழங்கினார்.

குறிப்பாக ரயில் நிலையங்களில் பயணிகள் சாப்பிடும் போது ஒரு முறைக்கு இரண்டு முறை நல்ல உணவு தானா? பாதுகாப்பானது தானா? நம்பி சாப்பிடலாமா? என்று சந்தேகமாக யோசிப்பது பழக்கம். இந்த ‘Eat Right Station’ சான்றிதழ் ஆனது அந்த பிரச்சனைக்குத் தான் ஒரு தீர்வை தருகிறது. இந்த ‘Eat Right Station’ சான்றிதழ் இருப்பதால் இனி தைரியமாக  பயணிகள் அங்கே சாப்பிடலாம்.

Latest Slideshows

Leave a Reply