ECIL Recruitment 2024 : 1100 பணியிடங்கள் ஐ.டி.ஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா Electronics Corporation Of India Limited (ECIL) நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician) பணியிடங்களை (ECIL Recruitment 2024) நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இந்த பணியிடங்கள் (ECIL Recruitment 2024) தற்காலிக அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ECIL Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா Electronics Corporation Of India Limited (ECIL) நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் (275) பணியிடங்களும், எலக்ட்ரீசியன் (275) பணியிடங்களும் மற்றும் ஃபிட்டர் (550) பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்/எலக்ட்ரீசியன்/ஃபிட்டர் பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) : 16.01.2024 அன்று வரை 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் மத்திய அரசின் விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் (Junior Technician) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு சம்பளம் ரூ.22,528/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) :
    இந்த Junior Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.ecil.co.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  7. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) :
    இந்த Junior Technician  பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.01.2024 ஆகும்.

  8. மேலும் விவரங்களுக்கு :
    https://www.ecil.co.in/jobs/Advt_JTC_01_2024.pdf என்ற அதிகாரப்பூர்வ  இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply