Economic Development of India : 2024-ன் 3-வது காலாண்டுக்கான இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.40% - NSO Report

2024-ன் 3-வது காலாண்டுக்கான இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.40% என்று National Statistics Office அறிவித்து உள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistics Office) ஆனது நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்கான இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.40 சதவீதம் ( Economic Development of India) என்று அறிவித்து உள்ளது. இந்தியா Corona பெருந்தொற்றால் ஏற்பட்ட தொய்வு, ரஷ்யா-உக்ரைன் மோதல், பணவீக்கம் ஆகியவற்றில் இருந்து மீட்சிப் பெற்று துறைகள் தோறும் விரிந்த தளத்தில் இந்திய பொருளாதாரம் நிதியாண்டு 23–ன் வளர்ச்சி பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு தற்போது முன்னேறி வருகிறது.

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு ஆனது நடப்பு நிதியாண்டு 24-ல் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியாண்டு 24-க்கான GDP மதிப்பீடு 6-6.8% ஆகும். இது இந்திய நாட்டின் உற்பத்தி செயல்பாட்டை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் துறைகள் தோறும் திறன் பயன்பாடு ஆனது விரிவடைந்துள்ளது. தற்போது மத்திய அரசின் மூலதனச் செலவும் மற்றும் தனியார் மூலதன செலவின் அதிகரிப்பும், பெருநிறுவனங்களின் ஆண்டு வரவு செலவு அறிக்கைகளை இந்தியாவில் வலுப்படுத்தியுள்ளது.

இது 2024 நடப்பாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக் காரணிகளில் ஒன்றாக அமைந்து உள்ளது. விரிவடைந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் காரணமாக இந்தியாவில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைந்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி பதிவு வேகமடைந்து உள்ளது. தற்போது டிஜிட்டல் துறைகளில் ஏற்பட்டுள்ள விரிவாக்கம் மற்றும் இந்தியாவின் பொருள் உற்பத்திக்கான நடவடிக்கைகளுக்குக்கான ஊக்கம் ஆகியவற்றால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. வங்கித் துறை, வங்கி அல்லாத துறை, கார்ப்பரேட் துறைகளின் வரவு – செலவு அறிக்கைகள் ஆனது இந்தியாவில் வலுவானதாகவும், மேம்பட்டும் இருப்பதால், புதிய கடன் சுழற்சி ஏற்கனவே தொடங்கி உள்ளது.

இதனால், கடந்த சில மாதங்களில் இந்தியாவில் வங்கிக் கடன் வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது. இந்தியா முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த நாடாக விளங்கி வருவதாக கருத்து நிலவி வருகிறது. முதலீடுகளுக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியா மாறி உள்ளதால் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் சமீபத்தில் வெளிவந்த காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி பணவீக்கம் ஆனது, 1.00 முதல் 1.50% மற்றும் முதல் இரண்டு காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி சதவீதத்தையும் National Statistics Office உயர்த்தி அறிவித்து உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Latest Slideshows

Leave a Reply