Education Loan : வங்கியில் கல்வி கடன் பெறுவது எப்படி?

பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதே நேரத்தில் உயர்கல்விகளில் செலவாகும் பணத்தின் மதிப்பும் அதிகரித்து விட்டது. இதனால் ஏழை மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற கனவுகள் அதிகமாக நிறைவேறாமல் போகிறது. இதனால் வங்கிகள் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு Education Loan வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு கல்விக்காக அதிக அளவு பணம் தேவைப்படுகிறது. இதனை வங்கிகள் மூலம் எப்படி பெறலாம் என்று தெரிந்து கொள்வோம்.

எந்தெந்த படிப்புகளுக்கு எல்லாம் Education Loan உண்டு :

பல்கலைக்கழக மானிய குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் பொழுது கல்வி கடனை பெறலாம். மேலும் இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புக்கு கூட இந்த Education Loan வழங்குவது உண்டு. ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற கழிவு நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளில் சேருபவர்கள் கூட இந்த கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய நர்சிங் கவுன்சில், டைரக்டர் ஜெனரல் ஆப் ஏவியேசன் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் மூலம் நடத்தப்படும் நர்சிங் டிப்ளமோ அல்லது நர்சிங் பட்ட படிப்பிற்கும் இந்த Education Loan பெரும் உரிமை உண்டு. பிரபலமான வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தும் அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கும் அதில் சேரும் மாணவர்களுக்கும் Education Loan கிடைக்கும். இது மட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் Education Loan கிடைக்கும்.

தேவையான ஆவணங்கள் :

  • கல்லூரி Bonafide Certificate.
  • கல்வி கட்டணம் செலுத்திய நகல்.
  • வருமானச் சான்றிதழ்.
  • இருப்பிட சான்றிதழ்.
  • பள்ளி மாற்று சான்றிதழ்.
  • பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

கல்விக்கடன் எவ்வளவு வரை பெறலாம் :

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெற முடியும். வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடனாக பெறலாம். வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் போக்குவரத்து செலவு கூட கல்விக்கடன் பெற முடியும்.

முன்பணம் செலுத்தனுமா ?

ரூபாய் 4 லட்சம் வரை கல்வி கடன் பெற வேண்டுமென்றால் வங்கிகளில் முன்பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. அதுக்கும் அதிகமாக கல்வி கடன் வாங்கினால் அந்த தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும்.

வட்டி சதவீதம் :

மிகவும் குறைந்த அளவு வட்டி சதவீதமே கல்விக்காக நிர்ணயிக்கப்படுகின்றன. சுமார் 12 சதவீதம் முதல் 16 சதவீதம் மட்டுமே கல்வி கடனுக்காக வங்கியில் வட்டி சதவீதமாக பெறப்படும். கல்விக்கடன் பெரும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே வட்டியை செலுத்த வேண்டும் என்று எந்த வங்கியும் இவர்களை கட்டாயப்படுத்த முடியாது. படித்து முடித்த பின்னரே வட்டியை செலுத்த முடியும் என்று மாணவர்கள் முன்கூட்டியே தெரிவித்து விடலாம்.

எப்போது திருப்பி செலுத்த வேண்டும்?

படிப்பை முடித்த ஓராண்டிலிருந்து வட்டி கட்ட ஆரம்பிக்க வேண்டும். இல்லையெனில் வேலைக்கு சென்ற பிறகு ஆறு மாதத்தில் இருந்து வட்டித் தொகையை செலுத்த வேண்டும். கல்வி கடன் தொகையை பெறுபவர்கள் 15 ஆண்டுக்குள் முழு தொகையும் செலுத்திட வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply