Education To Be Included On State List : கல்விப் பாடத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

Education To Be Included On State List :

தமிழக முதல்வர் M K Stalin கல்வியை மாநிலப் பட்டியலில் (Education To Be Included On State List) சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மாநில அரசியல் சட்டத்தின் பட்டியலில் ‘மக்களுடன் நேரடித் தொடர்பு’ சம்பத்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் M K Stalin கூறியுள்ளார். “குறிப்பாக மாநிலப் பட்டியலில் கல்விப் பாடத்தை சேர்க்க (Education To Be Included On State List) வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் நாம் NEET போன்ற கொடுமையான தேர்வை முற்றிலுமாக ஒழிக்க முடியும்” என்று உரையாற்றியுள்ளார். இந்தியா ஆனது பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை கொண்ட  மாநில மக்களின் வளர்ச்சியுடன் ஒன்றி முன்னேற வேண்டும்.

Education To Be Included On State List : இந்தியா தனது பன்முகத்தன்மையை  மாநிலத்திற்கு மாநிலம் நிலவும் உணர்வுகளை பல்வேறு மொழி, கலாச்சார மற்றும் மதம் மூலம் வெளிப்படுத்துகிறது. இந்தியா என்பது வெறும் புவியியல் எல்லைகள் அல்ல  என்றும் அது இலட்சியங்களால் வடிவமைக்கப்பட வேண்டும் என்றார். காந்தி, பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் கொள்கைகளில் பகிரப்பட்ட சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சம நீதி ஆகியவற்றால் இந்தியா பலப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். மாநில சுயாட்சிக்காக மறைந்த முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி ஆகியோர் தொடர்ந்து வாதிட்டதாக ஸ்டாலின் கூறினார்.

மதச்சார்பின்மை மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு போன்ற முக்கிய விழுமியங்களை நிலைநிறுத்தும் இந்தியாவை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று கூறினார். ஒற்றுமையின் மூலம் நமக்கு கிடைத்த சுதந்திரத்தை அதே ஒற்றுமையுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். அதனால் முரண்பாடுகளை விதைக்கும் சக்திகளை களையெடுப்பது அவசியம் என்றார். மத மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழி, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருவதாக கூறினார். கல்வி, பொருளாதாரம், மருத்துவம், விவசாயம், ஏற்றுமதி மற்றும் திறமையான மனிதவளம் ஆகிய துறைகளில் தேசத்தின் முழுமையான வளர்ச்சிக்கு தமிழகம் ஆனது கணிசமான பங்களிப்பைச் செய்து வருகின்றது என்றார்.

Latest Slideshows

Leave a Reply