Eid Milad Un Nabi 2023 : மிலாடி நபி கொண்டாட்டம்...

Eid Milad Un Nabi 2023 : மிலாடி நபி, மிலாதுன் நபி, மிலாத் உன் நபி என பல பெயர்களில் அழைக்கப்படும் மிலாடி நபி பண்டிகை இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இறைத்தூதர் என்று இஸ்லாமிய மக்களால் போற்றப்படும் முஹம்மது நபியின் பிறந்தநாளான ஈத் மிலாதுன் நபி கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி-உல்-அவ்வல் 12 ஆம் நாளில் நபிகள் நாயகம் மக்காவில் பிறந்தார். எனவே மிலாதுன் நபி தினம் பொதுவாக ரபி-உல்-அவ்வல் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இஸ்லாமிய நபியின் பிறந்தநாளான மிலாடி நபி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் உலகம் முழுவதும், குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மவ்லித் என்றும் அழைக்கப்படுகிறது. மவ்லித் முதன்முதலில் 11 ஆம் நூற்றாண்டில் எகிப்தில் அனுசரிக்கப்பட்டது மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் சிரியா, துருக்கி, மொராக்கோ மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

நபிகளின் பிறப்பு :

முஹம்மது நபி சவூதி அரேபியாவின் மெக்காவில் கிபி 570-இல் பிறந்ததாக நம்பப்படுகிறது. மனிதகுலம் அனைவருக்கும் அன்பு மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்பிய அல்லாஹ்வின் கடைசி தூதர் அவர். மக்காவில் பிறந்த முஹம்மது நபியின் முழுப் பெயர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இவரது தந்தையின் பெயர் அப்துல்லா. தாயார் பெயர் அமீனா. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளாக தனது மக்களுக்கு அல்லாஹ்வின் செய்தியைப் பரப்பத் தொடங்கினார்கள்

மிலாடி நபி கொண்டாடும் முறை :

Eid Milad Un Nabi 2023 : இந்நாளில் முஹம்மது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பது முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை போன்றவற்றை தனமாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மிலாடி நபி அன்று, அனைத்து இஸ்லாமியர்களும் முஹம்மது நபியின் நினைவாக சிறப்புத் தொழுகை நடத்துகிறார்கள். இந்நாளில் நண்பர்கள், உறவினர்களை அழைத்துப் பரிசுகள் வழங்குவதும், ஒருவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும், ஒன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதும் வழக்கம்.

ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் மிலாடி நபியை வித்தியாசமாக கொண்டாடுகிறார்கள். சன்னி முஸ்லிம்கள் மிலாடி நபியை ரபி உல் அவ்வல் மாதத்தின் 12 வது நாளிலுல் மற்றும் ஷியா முஸ்லிம்கள் 17 வது நாளிலும் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாளில் புதிய ஆடைகளை அணிந்து, சிறப்பு பிரார்த்தனை செய்து, வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளுதல் என பழக்கமான கொண்டாட்டத்துடன் மிலாடி நபியை கொண்டாடி வருகின்றனர்.

Eid Milad Un Nabi 2023 - இந்தியாவில் மிலாடி நபி :

Eid Milad Un Nabi 2023 : பொதுவாக, இஸ்லாமியப் பண்டிகைகள் அனைத்தும் பிறை தெரிவதன் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. மிலாடி நபி இந்தியாவில் செப்டம்பர் 28 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது. முஹம்மது நபி தனது வாழ்நாளில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த புனிதமானவர். அனைவரும் அவரை நினைத்து அவர் வழியில் நடக்க வேண்டும். மிலாதி நபியைக் கொண்டாடுவதன் நோக்கம், ஒவ்வொருவரும் அவருடைய போதனைகளைப் பின்பற்றி அல்லாஹ்வின் அன்புக்கு உரியவனாக இருக்க வேண்டும் என்பதே மிலாடி நபி கொண்டாடப்படுவதன் நோக்கம் ஆகும்.

Latest Slideshows

Leave a Reply