Ek Bharat Shrestha Bharat - 17,000 cr Projects in Tuticorin : கடந்த 28/02/2024 அன்று தூத்துக்குடியில் ரூ.17,000 கோடி திட்டங்கள் தொடங்கப்பட்டது

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 17,300 கோடி மதிப்பிலான 36 முக்கிய திட்டங்களை (Ek Bharat Shrestha Bharat – 17,000 cr Projects in Tuticorin) கடந்த 28/02/2024 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டங்கள் இந்தியா முழுவதும் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். 

இந்த முக்கிய திட்டங்கள் இந்தியா முழுவதும் 

  • போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல் 
  • போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் 
  • கடல்சார் திறன்களை வலுப்படுத்துதல் 

ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளன. மேலும் இது வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு முன்னேற்றம் ஆகும். தமிழ்நாட்டு வளர்ச்சியின் வேகத்தைக் கூட்டும் வண்ணம் கடல் வாணிபத் திட்டங்கள், சாலைவழித் திட்டங்கள் ரயில் பாதைத் திட்டங்கள் ஒன்றாகத் தொடங்கப்பட்டன. எண்ணூர், சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 பெரிய துறைமுகங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். 

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி மற்றும் திறந்து வைத்த திட்டங்கள் : Ek Bharat Shrestha Bharat - 17,000 cr Projects in Tuticorin

  • ரூ. 7056 கோடி செலவில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத் திட்டம். 
  • வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி மையம் தொடக்கம். முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீா்வழிக் கப்பல் செயல்பாட்டின் தொடக்கம். 
  • சுமாா்ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை திட்டம் – கன்னியாகுமரி, நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி செல்லும். வாஞ்சி மணியாச்சி-நாகா்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம்-ஆரல்வாய்மொழி பிரிவு உள்பட இரட்டை ரயில் பாதை திட்டங்களின் தொடக்கம். 
  • ரூ.4,586 கோடி செலவில் 4 சாலைத் திட்டங்கள் – தேசிய நெடுஞ்சாலை 844-இல் ஜித்தண்டஹள்ளி-தருமபுரி இடையே நான்குவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 81-இல் மீன்சுருட்டி-சிதம்பரம் இடையே இருவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-இல் ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் இடையே நான்குவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-இல் நாகப்பட்டினம்-தஞ்சாவூா் இடையே இருவழிப் பாதை ஆகிய 4 சாலைத் திட்டங்களின் தொடக்கம். இந்த 4 சாலைத் திட்டங்கள் பயண நேரத்தைக் குறைத்து, சமூகப்-பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதுடன் புனித யாத்திரைப் பயணங்களை எளிதாக்கும். 
  • குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இஸ்ரோ நிறுவனத்தின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இஸ்ரோவால் செயல்படுத்தப்படும் ரூ.986 கோடி மதிப்புள்ள திட்டமும் ராக்கெட் ஏவுதளத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டிய பின்னர் அங்கிருந்து ரோகிணி (Rohini sounding rocket) விண்ணில் ஏவப்பட உள்ளது 
  • கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல் அறிமுகம். 
  • 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகள் நாட்டுக்கு அா்ப்பணித்தார்.

பிரதமர் மோடி உரை :

பிரதமர் மோடி “கடந்த 10 ஆண்டுகளில், எண்ணூர், சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு 167 மில்லியன் டன்னிலிருந்து 338 மில்லியன் டன்னாக இரட்டிப்பாகி உள்ளது. கப்பலின் செயல்பாட்டு நேரம் ஆனது 50% வரை குறைக்கப்பட்டுள்ளது. சாகர்மாலா, பாரத்மாலா, பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள எண்ணூர், சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 பெரிய துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய துறைமுகங்கள் அமைச்சகம் மிகுந்த கவனம் செலுத்துகிறது.

கடல் வாணிபத்துறையின் வளர்ச்சி, மற்றும் நீர்வழி உல்லாசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கும் அதிகரித்திருக்கிறது. இந்த வளர்ச்சி இன்னும் பல மடங்கு அதிகரிக்கவிருக்கிறது. தற்போது பல்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கும் 75 கலங்கரை விளக்கங்கள் மேம்படுத்தப்பட்டு வருங்காலத்தில் பெரிய சுற்றுலா மையங்களாக மாற்றப்படும். ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பாரதத்தின் முதல் மக்கள் பயணப் படகு இன்று தொடங்கப்பட்ட படகு தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையேயிருக்கும் நல்லுறவு மேலும் அதிகரிக்கும் மற்றும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்” என்றார்.

Latest Slideshows

Leave a Reply